கோயில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வுகளுக்குத் தடை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவிப்பு

2 Min Read

திருவனந்தபுரம்,அக்.28- திருவிதாங்கூர் பிராந்தியத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் நிர்வகிக்கும் கோயில்களின் வளாகங்கள் மற்றும் அதற்குச் சொந்தமான இடங் களில் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அந்த வாரியம் உத்தர விட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவு: ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள் சட்ட விரோதமாக கோயில் வளாகங்களை ஆக்கிர மிப்பு செய்யக் கூடாது என கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் திருவனந்தபுரம் மாவட் டத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் நிர்வகிக்கும் சர்கரா தேவி கோயில் வளாகத்தில் ஆயுதப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றுக் குத் தடை விதித்து உத்தரவிட்டது.

அறிவிக்கை வெளியீடு 

இதையடுத்து, திருவிதாங் கூர் தேவஸ்வம் வாரியம் நிர்வகிக்கும் கோயில்கள் மற்றும் அதற்குச் சொந்தமான இடங்களில் ஆர். எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்வுக்குத் தடை விதித்து புதிய அறிவிக்கை வெளியிட்டது.

அதில், வாரியத் திடம் முறை யான அனுமதி பெறாமல் தீவிர சித்தாந்தங்களை பரப்பும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் கோயில் வளாகங்களில் பயிற்சிகள் மேற் கொண்டால் அதற்கு முழுத் தடை விதிக்கப் படுகிறது. அதேபோல் கோயில் வளாகத்துக்குள் புரட்சி கரமான மந்திரங்களை முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்படுகிறது.

ஒளிப்படங்கள், பதாகைகளுக்குத் தடை

வாரியத்தால் நிர்வகிக்கப் படும் கோயில்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளைகள் செயல் படுகிறதா அல்லது ஆயுதப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படு கிறதா என்பதை கண்காணிக்க தேவஸ்வம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அடிக்கடி சோதனைகள் மேற் கொள்ள வேண்டும். கோயில் நிர்வாகத்துக்குச் சம்பந்தமில்லாத நபர்களின் ஒளிப்படங்கள், அமைப்பு களின் கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவற்றை வளாகத்துக் குள் அனுமதிக்கக்கூடாது.

அதுபோன்ற நடவடிக் கைகள் ஏதும் கோயில் வளா கத்துக்குள் நடைபெற்றால் கோயிலில் பணி புரியும் ஊழியர்கள், பூசாரிகள் உள்ளிட்டோர் உடனடியாக வாரி யத்துக்குத் தெரியப்படுத்த வேண் டும். இல்லையெனில் அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வழிமுறைகளை யாரேனும் பின்பற்றத் தவறி னால் கேரள உயர்நீதிமன்ற உத்தரவை மீறியதற்கான பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வழிமுறைகளை 2016, மற்றும் 2021-களில் ஏற்கெனவே திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரி யம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *