இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மாநாடு

1 Min Read

சென்னை, டிச.1 வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய இளைஞர்களின் ஆற்றல் மிக்க மனங்கள் ஒருங்கிணைகின்ற ஒரு செயல்தளமாக சென்னையில்  டிசம்பர் 21, – 22 தேதிகளில் நடைபெறவுள்ள “டேக் பிரைட் 2023” _ 20ஆவது தேசிய உச்சி மாநாடு அதிக எதிர்பார்ப்புகளை உரு வாக்கியுள்ளது.

 இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஅய்அய்) இளையோர் பிரிவான யங் இந்தி யன்ஸ்  (சீவீ)  தேசத்தின் வளர்ச்சிக்காக இளம் தலைவர்களது திறன் மற்றும் ஆக்க பூர்வ மாற்றத்திற்கான கலந்துரையாடலை ஊக்குவிக்கும்  முயற்சியாக இந்த இரு நாள் மாநாடு, சென்னையில் அய்டிசி கிராண்ட் சோழா வளாகத்தில் நடத்தப் படவிருக்கிறது.

 இந்த உச்சிமாநாட்டின் 20ஆவது பதிப்பு இளையோரின் தலைமைத்துவ பண்பு, தேசத்தின் கட்டமைப்பு மற்றும் சிந்தனையில் தலைமைத்துவம் என்பது மீது கவனம் செலுத்தும். 

தமிழ்நாடு அரசின்  தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி. ராஜா, ஜி20 மாநாட்டின் ஷெர்பா  அமிதாப்காந்த், தொழில் துறையின் பிரபல  ஆளுமைகள் இதில் பங்கேற் கிறார்கள். 

இந்த தகவலை  யங் இந்தியன்ஸ் (சீவீ) அமைப்பின் தேசிய தலைவர்   திலீப் கிருஷ்ணா  தெரிவித் துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *