தஞ்சை, டிச. 1- தஞ்சாவூர் மாதா கோட்டை சாலையில் இயங்கி வரும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் – அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் சார்பில் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 91ஆவது பிறந்தநாள் சிறப்புக் கூட்டம் நேற்று (30.11.2023) மாலை 6 மணி அள வில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மணல்மேல் குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் யோவான்குமார் வர வேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்ட இளைஞரணி செய லாளர் பேபி ரெ.இரமேஷ் தலைமையேற்று உரையாற் றினார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர், பெரியார் படிப்பக இயக்குநர் கோபு.பழனிவேல், பகுத்தறி வாளர் கழக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரி சாமி, மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் அதிரடி க.அன் பழகன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
தஞ்சை மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் சி.அமர் சிங், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார் இரா.குணசேக ரன், ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினர்.
காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் இராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார். கழகப் பேச் சாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி சிறப்புரையாற்றினார். தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் க.மணிகண்டன் நன்றி உரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக் குமார் நிகழ்வினை ஒருங்கி ணைத்து இணைப்பு உரை யாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்த நாள் மாவட்டத் தலைவர் அமர்சிங் அவர்கள் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இச்சிறப்பு கூட்டத்தில் மாநில கலைத்துறை செயலா ளர் தெற்குநத்தம் ச.சித்தார்த் தன், மாவட்ட துணை செய லாளர் அ.உத்திராபதி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஆ.லெட்சுமணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் குழந்தை கவுத மன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் இரா.சர வணாக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் முனைவர் வே.இராஜவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர துணைத் தலைவர் வண்ணிப்பட்டு செ.தமிழ்ச் செல்வன், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.வீரக்குமார்,
புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச் செல்வன், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் ஏ.பாக் கியம், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் தங்க வெற்றி வேந்தன், நா.எழிலரசன், கு. குட்டிமணி, மாவட்ட மாண வர் கழக துணை செயலாளர் ஏ.விடுதலை அரசி, மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம், காங்கிரஸ் கட்சி அ.ஜேம்ஸ், சூரக்கோட்டை பாரதிதேவா, படிப்பக வாசகர் அ.குழந்தை சாமி மற்றும் ஏராளமான கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.