ஒடுக்கப்பட்டேர் வரலாற்றில் மறைக்க இயலாத மாமனிதர் வி.பி.சிங் ரிசர்வ் வங்கி பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் – நன்றித் தீர்மானம்

2 Min Read
திராவிடர் கழகம்

3.4.1993 அன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி – பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் சங்கப் பேரவைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பற்றி நிறை வேற்றப்பட்ட தீர்மான விவரம்:

“சமுதாய நீதிக்காக சமர் புரிந்து – இன்னல் பல எதிர்கொண்டோர் ஏரா ளம். அவர்களிடையே தலைசிறந்த பகுத்தறிவாளராக, ஒப்புவமையற்ற சீர் திருத்தச் செம்மலாக வரலாறு காணாத சுயமரியாதைச் சுடரொளியாக வாழ்ந்து, தம் வாழ்நாளின் பெரும்பகுதியை முக்கால் நூற்றாண்டுக் காலத்தை – சமுதாயப் பணிக்காகவே உவந்தளித்த தந்தை பெரியார் அவர்கள், துணிவு, தூய்மை, எளிமை என எண்ணிறந்த பண்புகளின் உறைவிடமாய் வாழ்ந் தார்.

அப்பெருந்தகையின் மறைவிற்குப் பின்னரும் தந்தை பெரியாரின் லட்சி யக் கனவுகளைத் தன் சிந்தையிலே கொண்டு அயராது உழைத்துச் சமு தாயப் பணியாற்றும் தனிப் பேராற்றல் கொண்டவர், தந்தை பெரியார் போர்ப் பாசறையின் தளபதி எனப் போற் றப்படும் திரு.கி.வீரமணி அவர்கள், புதைபொருளாய் மறைந்திருந்த மண் டல் குழுவின் அறிக்கையினை அகழ்ந்தெடுத்து மீட்டு வந்து அரசா ணையாக உருமாற்றிய வரலாற்றுச் சாதனை, “பெரியார் விட்டுச் சென்ற பெரும் பணியைத் தொடர சரியான படைத் தலைவர் இவரே!” என்பதைப் பிற்படுத்தப்பட்ட மக்கள் மன்றத்தில் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்து கிறது.

3.4.1993ஆம் நாளன்று நடைபெற்ற “ரிசர்வ் வங்கி – பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் சங்கப்” பேரவைக் கூட்டம் – இத்தீர்மானத்தின் வாயிலாகத் தளபதி வீரமணி அவர்களின் அரும் பணியை நினைவு கூர்ந்து அளப்பரிய நன்றியை உரித்தாக்கு கிறது.”

– இவ்வாறு அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

3.4.1993 அன்று நடைபெற்ற பேர வைக் கூட்டத்தில் வி.பி.சிங் அவர்க ளுக்கு நன்றி தெரிவித்து நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் விவரம்:

“16.11.1992ஆம் நாளன்று வெளி யான தீர்ப்பின்படி உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற்படுத்தப் பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றிய அரசாணையை 13.8.1990ஆம் நாளன்று பிறப்பித்தன் வாயிலாக திரு.வி.பி.சிங் அவர்கள், நலிந்தோர் நலம் பேணும் சமூகநீதிக் காவலராக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக் கிறார்.

முற்போக்குச் சிந்தனையில் உரு வாகி, சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டுத் திட்டம், வரலாற்றுப் பொன்னேடுகளுக்கு வளம் சேர்க்கும் தன்மை கொண்டது. இதனைக் கருத் தில் கொண்டு, 3.4.1993ஆம் நாளன்று நடைபெற்ற “ரிசர்வ் வங்கி – பிற் படுத்தப்பட்ட வகுப்பு ஊழியர் சங்கப்” பேரவைக் கூட்டம். இந்த முதல் வாய்ப் பைப் பயன்படுத்திக் கொண்டு, திரு. வி.பி.சிங் அவர்கள் ஆற்றிய மறக்க இயலாத வரலாற்றுச் சாதனையை நினைவு கூர்ந்து, என்றும் மறவாத நன்றி உணர்வை அப்பெருந்தகைக்கு இத்தீர்மானத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறது.”

– இவ்வாறு அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

– விடுதலை, 9.9.1993

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *