திருவாரூர் குடவாசல் ஒன்றிய இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
குடவாசல், அக். 28- திருவாரூர் மாவட் டம் குடவாசல் ஒன்றிய திரா விடர் கழக இளைஞரணி கலந் துரையாடல் கூட்டம் நடை பெற்றது.
திருவாரூர் மாவட்டம் குட வாசல் ஒன்றியம் திப்பணாம் பேட்டை ஒன்றிய தலைவர் ஜெயராமன் இல்லத்தில் 24.10.2023 மாலை 6 மணி அளவில் ஒன்றிய கலந்துரை யாடல் கூட்டம் கழக ஒன்றிய தலைவர் என்.ஜெயராமன் தலை மையிலும் மாநில விவசாய அணி செயலாளர் க.வீரையன், மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ், ஒன்றிய துணை தலைவர் சி.அம்பேத்கர், இளை ஞரணி தலைவர் கோ.பிளாட்டோ ஆகியோர் முன்னி லையிலும் மாவட்ட தலைவர் வீ. மோகன் நோக்க உரையாற்றி னர்.
தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றிட நிகழ்வு நடைபெற்றது.
கூட்டத்தில், மறைந்த கழகத் தோழர் கீழப்பாளையூர் பேச்சு முத்து அவர்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது எனவும், வரும் 4.11.2023 சனிக்கிழமை அன்று மாவட்ட இளைஞரணி சார்பில் பெரியார் 145 ஆவது ஆண்டு பிறந்தநாள் பட ஊர்வலம் சமூக நீதி பாதுகாப்பு பேரணி குட வாசலில் நடத்துவது எனவும், ஒவ்வொரு மாதமும் ஒன்றிய இளைஞரணி சந்திப்புக் கூட் டங்கள் நடத்துவது எனவும் மஞ்சக்குடியில் தந்தை பெரியார் சிலை அமைக்க துரிதமாக செயல்படுவதெனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் 91ஆவது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி 50 விடுதலை சந்தா திரட்டி தரு வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குடவாசல் ஒன்றியத்தில் கிளைக் கழக அமைப்பை வலுப்படுத்தும் பொருட்டு கூந்தலூர் இளைஞ ரணி கிளைக் கழக அமைப்பு அமைக்கப்பட்டது. தலைவர் ஜா.ராஜா, செயலாளர் அ. ராஜ் மோகன், துணை தலைவர் கா. செம்பியன், துணை செயலாளர் தமிழனன் ஆகியோர் ஆகியோர் கிளைக் கழக பொறுப்பாளர்க ளாக நியமிக்கப்பட்டது.
அனைத்து கிளைகளிலும் அமைப்புகளை வலுப்படுத்து வது எனவும் தீர்மானம் இயற் றப்பட்டது
இந்நிகழ்வில் கலந்து கொண் டோர் திருவாரூர் நகர தலைவர் கா.சிவராமன், இரவஞ்சேரி அரங்க.ராசா,சவுந்தர்ராஜன், வீரமணி, அறிவுக்கரசன், சித் தார்த்தன், இன்பத்தமிழ், ராஜ்மோகன், வினோத், கண்ணதா சன் ஆகியோர் கலந்து கொண் டனர்.