முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன! மாற்றுத்திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் – மெட்ரோ ரயில் பயணம் – விமானப் பயணம் அழைத்துச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன். இன்று துவக்கி வைத்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள்!.” என தெரிவித்துள்ளார்.