பிடித்தவரைத் தேர்வு செய்துகொள்ளலாம் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவால் தென்கொரிய அரசு அறிவிப்பு!

Viduthalai
1 Min Read

உலகம்

சியோல்,நவ.30 குழந்தை பிறப்பு விகி தத்தை அதிகரிக்க தென் கொரிய அரசே Blind Dating  என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பல ரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளது.

தென்கொரிய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது. 

இதற்கு காரணம் திருமணங்கள் நடப்பது குறைந்து விட்டதால் குழந்தை பிறப்பு விகித மும் குறைந்துவிட்டது என்பது தான். இப்படியே சென்றால் தென் கொரியா வில் மக்கள் தொகை கடுமையாகக் குறைந்து விடும் என அந்நாட்டு அரசு அஞ்சி இதற்கு முடிவு கட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. 

இதன் முதல் நடவடிக் கையாகப் பிறக்கும் குழந் தையின் பராமரிப்பு செல வுகளை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளி யான பிறகும் கூட எந்த மாற்றமும் ஏற்பட வில்லை. இதையடுத்து Blind Dating  என்ற நிகழ்ச்சியை அரசே நடத்தி வருகிறது.

திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஆண் கள்_பெண்கள் தங்க ளுக்கு பிடித்தமான இணைய ரைத் தேர்வு செய்து தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு Blind Dating  நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் இளைஞர்கள் பலர் பங்கேற்று வருகி றார்கள். இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசு நம்புகிறது.

ஆனால் அதன் வெற்றி சில ஆண்டுகளுக்கு பிறகு தான் தெரியவரும். இருந் தாலும் Blind Dating நிகழ்வுக்குப் பலரும் வர வேற்பு தெரிவித்து வரு கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *