செய்யாறு, நவ.30– 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் செய் யாறு படிகலிங்கம் மெடிகல்ஸ் உள்அரங்கத்தில் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்க மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் கழகத் தோழர்கள் அனைவரும் அவரவர் கருத்துகளை தெரிவித்தனர். இறுதி யாக தலைமைக் கழக அமைப் பாளர் காஞ்சி பா.கதிரவன் பல்வேறு சரித்திர நிகழ்வுகளை சுட்டிக் காட்டி தமிழர் தலை வர் அவர்களின் பணி, விடுதலை ஏட்டின் தாக்கம், ‘விடுதலை’ சந் தித்த சோதனைகள், சோதனை களைத் தாண்டி விடுதலை வென் றெடுத்த சாதனைகள் அனைத் தையும் விரிவாகப் பேசினார்.
நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் தி.காமராசன், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த என்.வி.கோவிந்தன், சின்னதுரை மற்றும் தங்கம் பெருமாள், மணிகண்டன், வட மணப்பாக்கம் மு.வெங்கடே சன், கழக மாணவர் கழக வெங் கடேசன், சிவக்குமார், ஆகாஷ், தினேஷ், அரவிந்த், மனோஜ்குமார், பாண்டியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தோழர் சங்கரய்யா மறை விற்கு வீரவணக்கம் மாவட்ட கழகத்தின் சார்பில் செலுத்தப் பட்டது.
டிசம்பர் 2 ஆசிரியர் அவர் களின் பிறந்த நாள் மகிழ்வாக கணிசமான ‘விடுதலை” சந்தா வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இருமாதத்திற்கு ஒருமுறை திராவிடர் கழக கலந்துரையா டல், பகுத்தறிவாளர் கழக கலந் துரையாடல் நடத்த தீர்மானிக் கப்பட்டது.
கிராமப்பிரச்சாரம் ஒன்றி யம் தோறும் மற்றும் நகரத்தில் தெருமுனை பிரச்சாரம் நடத்து வது என தீர்மானிக்கப்பட்டது.