தமிழ்நாட்டில் செத்த பிணத்திற்குச் சிங்காரமா?
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை விட மோசமானது, மோடியின் மனுதர்ம யோஜனா
வாலாஜா. அக். 28. குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? எனும் தலைப்பில் நாடு தழுவிய தொடர் பிரச்சாரப் பயணத்தில் வாலாஜாப் பேட்டை, வேலூரில் கலந்து கொண்டு ஆசிரியர் எழுச்சியுரை ஆற்றினார்,
விஸ்வகர்மா யோஜானா என்ற பெயரில் மோடி அரசு கொண்டு வந்த ஜாதி தர்ம திட்டத்தை, ”மனுதர்ம யோஜனா” என்று அடையாளப்படுத்தி, ஒன்றிய அரசின் இந்த சதித் திட்டத்தை எதிர்த்து, அக்டோபர் 25 முதல் நவம்பர் 5 வரையிலான 8 நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு கூட்டம் என்று திட்டமிட்டு தொடர் பயணப் பரப்புரைக் கூட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை பேருந்து நிலையம் முரசொலி மாறன் திடலில், 27.10.2023 அன்று மாலை 5:30 மணிக்கு தொடங்கியது. முதலில் மாந்தன் எலக்ட் ரோபதி கிளினிக் நடத்திவரும் டாக்டர் தி.க. சின்னத்துரை பகுத் தறிவு கேள்விகளைத் தொடுத்து, பதில்களை அவரே விடுத்து ராகத்துடன் தனி நபராகவே கொள்கைக் “கதா காலட்சேபம்” நடத்தி விட்டார்.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் தலைமை யேற்க, மேனாள் மாவட்டத் தலைவர் பொ.பெருமாள் அனைவ ரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்டக் காப்பாளர் பு.எல்லப் பன், மாவட்டச் செயலாளர் செ.கோபி, அமைப்பாளர் சொ.ஜீவன்தாஸ், மாவட்ட துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் கோ.சூர்யகுமார், அரக்கோணம் நகரத் தலைவர் கு. சோமசுந்தரம், மாவட்டத் துணைச் செயலாளர் க. தீனதயாளன், சிப்காட் ராஜசேகர். கழகப் பாடகர் ஆலப்பாக்கம் கு.இராவணன், கழகப் பேச்சாளர் சிங்கப்பூர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் வேண்டாள் தீனதயாளன், பூட்டுத்தாக்கு சின்னதுரை, பன்னியூர் பெ.ராஜேந்திரன், பாணாவரம் தணிகாசலம், பெல் ஏ.ஜி.எஸ்.தங்கராஜ், இலுப்பைத் தண்டலம் சின்னதுரை, கோ.செல்வம், அரக்கோணம் நகரச் செயலாளர் ரமேஷ். க.சு.பெரியார் நேசன், த.அன்பு, மண்டல இளைஞரணி தோழர் தி.இளந்திரை யன், மாவட்ட மாணவர் கழக தோழர் லோ.அறிவுமணி, செய் யாறு மாவட்டத் தலைவர் இளங்கோவன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் முரளி, செயலாளர் இளையவேல், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே.சி.எ.சிற்றரசன், பொதுக்குழு உறுப்பினர் செய்யாறு காமராசன், செய்யாறு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையேற்ற மானமிகுவாளர் கள் ஆவர். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந.இராமு, காவேரிப்பாக்கம் பேரூர் தி.மு.க. மேனாள் செயலாளர் போ.பாண்டுரங்கன் ஆகியோர் நிகழ்ச்சியை அறிமுகம் செய்வித்து உரையாற்றினர். தி.மு.க. நகர மேனாள் செயலாளர், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் த.க.பா.புகழேந்தி நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். முனைவர் துரை. சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்.
முன்னதாக ஆசிரியர் வருகையை “தோழா முன்னேறு! வீர மணியோடு!” என்ற பிரச்சாரப் பயணப்பாடலுடன், பறை இசை கொட்டி முழக்கி கொண்டாடித் தீர்த்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தோழர்கள். இறுதியாக ஆடை அணிவித்தல், புத்தகம் வெளியீடு ஆகியவைகள் முடிந்தவுடன் தமிழர் தலைவர் உரையாற்றினார். தொடக்கத்தில் பிரச்சாரத் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட நான்கு புத்தகங்களை தனித்தனியே எடுத்து அதைப் பற்றிய அறிமுகத்தை சாறு பிழிந்து தருவதைப் போலச் சொல்லி, மீதியும் தெரிந்து கொள்ள புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் பரப்புங்கள், திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, இந்தியாவிலேயே முதல் நகர சபை என்ற பெருமை வாய்ந்தது இந்த வாலாஜாபேட்டை என்று தொடங்கினார். தானாக திரண்டிருந்த மக்கள் பெருமிதத் துடன் கையொலி எழுப்பியும், விசிலடித்தும் ஆரவாரம் செய்தனர். நான்கு புத்தகங்களைப் பற்றி பேசியதே நிகழ்ச்சித் தலைப்பின் சாரத்தை சொன்னதைப் போலாயிற்று. ஆதலால், நடப்பு அரசியலுக்கு வந்தார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசான பி.ஜே.பி. கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் தைப் பற்றி குறிப்பிட்டவர், அந்த சட்டம் வரும்… ஆனா வராது… என்ற திரைப்பட உரையாடலைச் சொல்லி, மோடி அரசை எள்ளி நகையாடினார். மக்கள் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டதோடு கூடுதலாக வாய்விட்டுச் சிரித்தனர். அடுத்து ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வைத்தார். அதாவது, ‘எங்களுக்கு எதிரிகள் யாரும் கிடையாது. காவி அணிந்த பார்ப்பனரல்லாத மக்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம். அதற்காகத்தான் இண்டியா கூட்டணி பாடுபடுகிறது’ என்பதுதான் அது. 70 ஆண்டுகளுக்கு முன் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை விட மோசமானது மோடி கொண்டு வந்திருக்கும் விஸ்வகர்மா யோஜனா எனும் மனுதர்ம யோஜனா என்று சொல்லி, எப்படி மோசமானது என்பதை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புத்தகத்தை கொதிப்போடு படித்துக் காட்டி விளக் கினார். ஒரு பக்கம் மட்டும் சொன்னால் வீரியமும் பாதியாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தமிழ்நாட்டில் உள்ள திராவிட மாடல் அரசு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சொல்லி, மோடி அரசின் மோசடிகளின் வீரியத்தை முழுமையாக புரியவைத்தார். அதுவும் போதாதென்று, ‘போவதற்குள் நந்தவ னத்தை நாசம் செய்யலாம் என்று ஏதேதோ செய்து கொண்டி ருக்கிறார்கள்’ என்று உவமித்தார். இறுதியாக தென்நாட்டில் விரட் டியடிக்கப்பட்ட பா.ஜ.க. வடநாட்டிலும் அம்பலப்பட்டு வருகிறது. காரணம் பெரியார் கருத்து இந்தியாவை ஆள்கிறது. ஆகவே இண்டியா கூட்டணி வெல்லும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், காங்கிரஸ் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசோகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் முகமது அலி, தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் தக்கோலம் தேவபாலன், புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழ்க்கனல், ம.தி.மு.க.மாவட்டச் செயலாளர் பி.என்.உதயகுமார், ம.தி.மு.க. நகரச் செயலாளர் இரா.முருகானந்தம், இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.டி.இரவிவாணன், வி.சி.க. நகரச் செயலாளர் மேஷாக் மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி மாணவரணிச் செயலாளர் இனாமுல் அசன், சி.பி.எம். எல்.சி.மணி மற்றும் கு.குமரேசன், துரை.விசயகுமார், ஆசிரியர் காளப்பன், உ.பாபு, சி.நாகராஜ், ச.தினேஷ், ப.லோகேஷ், ம.வினோத், பா.சுரேஷ்குமார், ஜெ.சுரேஷ், பா.நவீன் குமார் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு கூட்டத்தை வெற்றிகரமானதாக ஆக்கினர். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தோழர் இரா.தமிழ்வாணன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
வாலாஜாபேட்டையிலிருந்து கழகத் தோழர்கள், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து விடை பெற்று தமிழர் தலைவர் வேலூர் நோக்கி தனது பயணத்தை தொடங்கி, வேலூர் வந்தடைந்தார். அண்ணா கலையரங்கத்தின் அருகில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர் மேடையில் ஏறுவதற்கு சாய்தளம் அமைக்கப்பட்டிருந்தது. வேலூர் மாவட் டத் தலைவர் இர.அன்பரசன் தலைமையில் செயலாளர் உ.விஸ்வநாதன் வரவேற்பில், மாவட்ட மகளிரணித் தலைவர் ந.தேன் மொழி இணைப்புரையில் முனைவர் துரை. சந்திரசேகரன் பேசிக் கொண்டிருந்தார். கழகக் காப்பாளர்கள் வி.சடகோபன், ச.ஈஸ்வரி, ச.கலைமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கு.இளங்கோவன், க.சிகாமணி, பழ.ஜெகன் பாபு, அமைப்பாளர் நெ.கி.சுப்பிரமணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிதாசன், வேலூர் மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக ஆசிரியர் பேசுகையில், “வர்ணாஸ்ரமத்தின் பிறப்பிடமே ஜாதிதான். அதை எதிர்த்து தான் திராவிட இயக்கமே பிறந்தது. எல்லாவற்றிலும் பேதங்கள் தலைவிரித்தாடிய சூழலை தலைகீழாக மாற்றி, அனைவருக்கும் அனைத்தும் என்ற கருத்து வலுப்பெற்று வருவதைப் பொறுத்துக்கொள்ளாத ஆரியத்தின் ஒரு சூழ்ச்சிதான் விஸ்வகர்மா யோஜானா’ என்று பீடிகையுடன் தொடங்கினார். ’இந்த ஆபத்தை பலரும் உணரவில்லை. ஆகவேதான் இந்தப் பயணம்’ என்று பயண நோக்கத்தையும் சுட்டிக்காட்டினார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் என்று சொன்ன வள்ளலாரை நினைவுபடுத்தி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆகியவற்றை புறக் கணிக்க வேண்டுகோள் விடுத்தார். ஏற்கெனவே நீட், கியூட், நெக்ஸ்ட் என்று நுழைவுத் தேர்வுகளால் நம் மாணவர்கள் வழி மறிக்கப்பட்டு இருக்கையில், 18 வயதுக்கு மேல் ஏன் கல்லூரி உனக்கு? அப்பன் தொழிலை செய்ய வேண்டியதுதானே? என்று சொல்வதுதான் விஸ்வகர்மா யோஜனா’ என்றார். அத்தோடு அவரது ஆத்திரம் தீரவில்லை. ஏற்கெனவே ராஜாஜியின் குலக்கல்வி குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கையில், செத்த பிணத்திற்கு சிங்காரமா?’ என்று கோபத்துடன் ஒரு கேள்வியை மக்கள் முன் வைத்தார். இது ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை விட மோசமானது; மனு தர்மத்திற்கு இதுதான் முன்னோட்டம். ஆகவே வருகின்ற பொதுத்தேர்தலில் பாசிச பா.ஜ.க.வுக்கு விடை கொடுத்து அனுப்புங்கள் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக உரையாற்றிய தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, தி.மு.க. வேலூர் மாவட்ட மருத்துவரணி தலைவர் தி.ச.முகமது சயி, வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில் குமார், திருப்பத்தூர் மாவட்டத் தலை வர் கே.சி.எழிலரசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிற்றரசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் சபீர் கான் ஆகியோரும் இ.யூ.மு.லீ. மாநகர தலைவர் முஹம்மது ஹனீப், செயலாளர் ஷகீல் அஹமத், பொருளாளர் குல்சார் அஹமத், தி.ந.க.மாவட்ட செயலாளர் ச.குமரன் ஆகியோரும் திராவிடர் கழகத் தோழர்களான இரா,கணேசன், வி.இ.சிவக்குமார், உ.ச.குருநாதன், ச.கி.தாண்டவ மூர்த்தி, சி.சாந்தகுமார், வி.மோகன், கோ,விநாயகம், வி.சரவணன், கோ.சஞ்சீவி, பொ.இரவீந்திரன், க.பரமசிவம், வ.பெருமாள் ஆகியோரும் பொதுமக்களும் ஏராள மானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக வேலூர் மாநகர தலைவர் ந.சந்திர சேகரன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அனைவரிடமும் விடை பெற்று அரூர் அரசு வள மனைக்கு ஆசிரியர் வந்தபோது நள்ளிரவு தாண்டி 1:30 மணி. அங்கும் அவரை வரவேற்க ஊமை ஜெயராமன், அரூர் ராஜேந்தி ரன் உள்ளிட்ட தோழர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களது வரவேற்பை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டு, சில வார்த்தைகள் அவர்களிடம் அளவளாவியபடி தனது அறைக்குச் சென்றார்.
முனைவர் துரை.சந்திரசேகரன், கழக மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், கழக சொற்பொழிவாளர் என்னாரெசு பிராட்லா, ஒளிப்படக் கலைஞர் பா. சிவக்குமார் மற்றும் புத்தக விற்பனைத் தோழர்கள் சாந்தகுமார், அர்ச்சுனன், ஆத்தூர் சுரேஷ், ஊடகவியலாளர்கள் உடுமலை வடிவேல், யுகேஷ், ஓட்டுநர்கள் சி. தமிழ்ச்செல்வன், அ.து. அருள்மணி, வி.மகேந்திரன், கே.என்.மகேஷ்வரன் மற்றும் தென்காசி சு.இனியன், கா.இர.நிலவன், க.சுரேந்திரர் ஆகியோர் ஆசிரியருடன் பயணம் செய்யும் தோழர்கள் ஆவர்.