நம்மில் சிலர் ஆரியத்தின் எலும்புத் துண்டுக்காக ஆசைப்பட்டு, சிறப்பாக ஆட்சி நடத்தக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தக்கூடிய; இந்திய துணைக் கண்டத் திற்கே வழிகாட்டக்கூடிய; தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வல்லவராக இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக நடத்தக்கூடிய ஆட்சியைப் பார்த்து குறை சொல்கிறார்கள். அமலாக்கத் துறை மூலம் கைது செய்கிறார்கள். உடனே என்ன சொல் கிறார்கள், ‘குற்றம் செய்தவர்கள் அமைச்சராக நீடிக்க லாமா?’ என்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாங்கள் கேட் கிறோம். பி.ஜே.பி.யில் எல்லோரும் உத்தமர்களா? மோடி தலைமையிலான இன்றைய அமைச்சரவையில் 44% பேர் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். நாங்கள் ‘யோக்கிய சீலர்கள்’ என்று அவர்களை நீக்கி விட்டீர்களா? ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் பாகே என்பவர் மீது 5 வழக்குகள் இருக்கின்றன. ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக நிதின் கட்கரி இருக்கிறார். அவர் மீது 4 வழக்குகள் இருக்கின்றன. ஒன்றிய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இருக்கிறார். அவர் மீது 6 வழக்குகள் இருக்கின்றன. ஒன்றிய உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக அஸ்வினி குமார் சவுபே இருக்கிறார். அவர் மீது 3 வழக்குகள் இருக்கின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது 4 வழக்குகள் இருக்கின்றன. ஒன்றிய சிறுபான்மை நல இணை அமைச்சர் ஜான் பால்னா மீது 9 வழக்குகள் இருக்கின்றன. ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் ரசித் பிரமானி மீது 11 வழக்குகள் இருக்கின்றன. ஒன்றிய நிதித் துறை இணை அமைச்சர் பங்கச் சவுத்திரி மீது 5 வழக்குகள் இருக்கின்றன. ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மீது ஒரு வழக்கு உள்ளது. ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் மீது 7 வழக்குகள் இருக் கின்றன. இப்படி 32 பேர் உங்கள் அமைச்சரவையில் இருக் கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உங்களுக்கு யோக்கியதை இல்லை. இங்கே நீங்களாகவே ஏற்பாடு செய்து ஒரு அமைச்சரை இன்றைக்கு காவலிலே வைத்து விட்டு, நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பார்த்து குற்றம் சொல்வதா?
(முனைவர் துரை. சந்திரசேகரன்,
வேலூர் – 27.10.2023)