டிசம்பர் 2 சுயமரியாதை நாள் – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது, விடுதலை சந்தா அளிப்பது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் பழனி அய்யா இல்லம் சேரன் தெரு, மறைமலைநகரில் 26.11. 2023, ஞாயிறு பகல் 12 மணிக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெறும்.
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணித் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
செங்கை சுந்தரம் (மாவட்ட தலைவர்)
—————-
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நமது குடும்பத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாவட்ட கழகம் சார்பாக ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா வழங்கவேண்டும்.
அதற்கான நமது மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் வரும் 26.11.23 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெறும்.
கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ப.முத்தையன் (மாவட்ட தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்)