‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும்’ திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது!அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசு, தமிழ்நாடு

சென்னை, நவ. 29- தமிழ்நாட்டில் ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டத்தில் பயனா ளிகள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

அவர்களது சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசு ரூ.173.77 கோடி வழங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விபத்து உயிரி ழப்புகளை தடுக்கும் நோக்கில் ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ என்ற திட்டம் கடந்த 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன்படி, தமிழ்நாடு எல் லைக்குள் நிகழும் சாலை விபத் துகளில் சிக்கி மருத்துவமனை யில் சேர்க்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

சமீபத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் ஒருவர், சென்னை குரோம்பேட் டையில் உள்ள ரேலா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டத்தின் 2 லட்ச மாவது பயனாளியான அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் நேற்று (28.11.2023) சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது,

“தமிழ்நாட்டில் 455 அரசு மருத் துவமனைகள், 237 தனியார் மருத் துவமனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகளில் இத்திட்டத் தின்கீழ் அவசர சிகிச்சை அளிக் கப்படுகிறது.

இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை தற்போது 2 லட் சத்தை கடந்துள்ளது. இந்த 2 லட்சம் பேருக்காக தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.173.77 கோடி வழங்கியுள்ளது” என்றார்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காம ராஜ், சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகா தார அமைப்பு திட்ட இயக்குநர் கோவிந்தராவ், ரேலா மருத்துவ மனை இயக்குநர் முகமது ரேலா, தலைமை நிர்வாக அலுவலர் இளங்குமரன் கலியமூர்த்தி, இணை இயக்குநர் ரவிபாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதலமைச்சர் காப்பீடு திட்ட முகாம்

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட் டம், ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் கடந்த 2009இல் தொடங்கப்பட்டு, இதுவரை 1.45 கோடி குடும்பங்கள் இத்திட்டத் தில் மருத்துவக் காப்பீடு அட்டை பெற்றுள்ளன.

விடுபட்ட குடும்பங்களும் இதில் சேர்வதற்காக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, வரும் டிச.2-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *