பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு: டிசம்பர் 7 வரை நீடிப்பு

1 Min Read

சென்னை, நவ. 29- பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக் கும் கடைசி நாள் டிச.7ஆ-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் பட் டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மய்ய பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 2024ஆ-ம் ஆண்டு ஜன.7ஆ-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 2,222 காலிப் பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு 2இ-ல் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரிகள், நவ.1 முதல் நவ.30ஆ-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரர்கள் கூடுதல் அவகாசம் கோரியிருந்தனர். இதை யொட்டி விண்ணப்பங்கள் பதி வேற்றம் செய்ய கடைசி தேதி டிச.7ஆ-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல பட்டதாரி ஆசிரி யர், வட்டார வள மய்ய பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்க ளது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், டிச.8, 9 ஆகிய தேதிகளில் திருத்தம் செய் வதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய் யப்பட்டுள்ளது.

அதேநேரம் விண்ணப்பதாரர் கள் தங்களின் செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட வற்றை மாற்ற முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *