பெரோஸ்பூர், ஜன. 12- பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ் பூர் மாவட்டத்தின் ஜிரா பகுதியில் உள்ளது சாகித் குருதாஸ் ராம் நினைவு அரசு பள்ளி. இங்கு கடந்த 2019ஆம் ஆண்டு க்ஷீர்மா என்பவர் முதல் வராக வந்தார்.
அப்போது அந்த பள்ளி மாவட்ட அளவில் உள்ள 56 பள்ளிகளில் 48ஆவது இடத்தில் இருந் தது. கடந்த 12 ஆண்டு களாக இந்த பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் யாரும் தர வரிசை பட்டியலில் இடம் பெறவில்லை.
மாணவிகளை ஊக்கு விக்க, பொது தேர்வு எழுதும் மாணவிகள் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தால் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதாக முதல்வர் சர்மா அறிவித்தார். விமானத்தில் பறக்க வேண்டும் என மாணவி கள் ஆசைப்பட்டனர்.
இந்தியாவுக்குள் எந்த நகருக்கு செல்ல வேண்டுமோ அதன் விமான கட்டணத்தை ஏற்பதாக முதல்வர் சர்மா உறுதிய ளித்தார்.
அதன்படி 10ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேரும், 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவரும் கடந்தாண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்று தர வரிசை பட்டியலில் இடம் பிடித்தனர். பிளஸ் 2 தேர் வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் பஜன் ப்ரீத் கவுர் மற்றும் சிம்ரன் ஜீத் கவுர் ஆகியோர் கோவாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடை பெற்ற இந்திய பன்னாட்டு புதுமை கண்டுபிடிப்பு கண் காட்சிக்கு சென்றனர். அவர்கள் அமிர்தசரஸ் நகரிலிருந்து கோவா சென்ற விமான பயணச் செலவை பள்ளி முதல்வர் சர்மா ஏற்றார்.
10ஆம் வகுப்பு தேர் வில் அதிக மதிப்பெண் எடுத்த 2 மாணவிகள் அமிர்தசரஸில் இருந்து டில்லிக்கு இந்த மாத இறு தியில் சுற்றுலா செல்ல வுள்ளனர். அவர்களின் விமான பயணச செலவை யும் பள்ளியின் முதல்வர் சர்மா ஏற்றுள்ளார்.
இதனால் அந்த 4 ஏழை மாணவிகளின் பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.