நாவலர் இரா. நெடுஞ்செழியன் நினைவு நாளில்…!

2 Min Read

“ஆரியர் – திராவிடர்” 

மற்றவை

இந்தியத் துணைக் கண்டத்தை எடுத்துக் கொண்டால், அதில் இரு பெரும் மொழிக் குடும்பங்கள் நின்று நிலவுகின்றன. ஒன்று ‘திராவிட மொழிக் குடும்பம்’ ஆகும்; மற் றொன்று இந்தோ – அய்ரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் ‘ஆரிய மொழிக் குடும்பம்’ ஆகும்.

தமிழ் – தெலுங்கு – மலையாளம் – கன்னடம் – துளு – கோண்டு – கூய் – ஒராயான் – பிராகுயி போன்றவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும்.

வேதமொழி – சமஸ்கிருதம் – பாலி – பிராகிருதம் – அப்பிரம்சம் – இந்தி – மராட்டி – குசராத்தி – சிந்தி – ஒரியா – வங்காளம் – அசாமி போன்றவை ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.

திராவிடக் குடும்பமொழிகள் மென்மையையும், உயிர் எழுத்தொலிகளையும், பின் ஒட்டுச் சொற்களையும் உடைய மொழிகளாகும்.  ஆரிய மொழிகள் கடுமையையும், பல ஒற்றுக்கள் இணைந்த சொல்லாக்கத்தையும், முன் ஒட்டுச் சொற்களையும் உடைய மொழிகளாகும்.

‘பெண்’, ‘கண்’, ‘வியப்பு’, ‘நீர்’ போன்ற சொற்கள் மென்மை வாய்ந்த தமிழ்ச் சொற்களாகும். ‘ஸ்திரி’, ‘அக்ஷ’, ‘ஆஸ்சரிய’, ‘ஜல’ ஆகிய சொற்கள் கடுமை வாய்ந்த வடமொழிச் சொற்களாகும்.

மூலத்திராவிட மொழியான தமிழ்மொழி, இந்தியா முழுவதும் பேசப்பட்ட மிக மிகத் தொன்மையான மொழியாகும் என்பதை, முன்னரே கண்டோம். மூலத் திராவிட மொழியான தமிழ், இட வேறுபாட்டாலும், பிற இனக் கலப்பாலும், இயற்கை மாற்றங்களாலும் சீற்றங்களாலும் தனித்தனி உருவங்களைப் பெற்றுத், தெலுங்கு – கன்னடம் – மலையாளம் – துளு போன்ற மொழிகளாக மாற்றங்கொண்டு நிலைக்கத் தலைப்பட்டன.

திராவிட மொழிச் சொற்களும், ஆரிய மொழிச் சொற்களும் தனித்தனித் தன்மையுடையனவாகும். தமிழ்மொழி வடமொழிச் சொற்களின் ஆதரவில்லாமல் இயங்கக் கூடிய தனித்தன்மையுடைய மொழியாகும்.

திராவிட மொழிகளுக்கும், ஆரிய மொழிகளுக்கும் எழுத்து முறை, அரிச்சுவடி (கிறீஜீலீணீதீமீt) போன்றவற்றில் சில ஒருமைப்பாடுகள் இருப்பதற்குக் காரணம், ஆரியர் இந்தியாவுக்கு வந்து, திராவிடரோடு கலந்ததற்குப் பிறகு, திராவிடரின் ஆக்கத்தால் ஏற்பட்ட விளைவு ஆகும். ஆரியர், திராவிடரிட மிருந்து சில செம்மையான இலக்கண முறைகளைக் கற்றுத், தம்மொழியைத் திரித்துக் கொண்டனர்.

டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்,  

நூல்:  திராவிட  இயக்க வரலாறு (முதல் தொகுதி)

குறிப்பு: இன்று நாவலர் நெடுஞ்செழியன் நினைவு நாள் (12.1.2000)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *