தங்கக் கதிர் வாழ்க கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி

Viduthalai
1 Min Read

மற்றவை

தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே — நம்

கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடி

காடெங்கும் கன்னல்ப ழக்குலை — நல்ல

களந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர்

கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி

தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே

கட்டாக ஏருழவர்

பட்டாளம் கிளம்பிற்றே — கட

கடவெனச் சகடுகள் கடந்தன தெருவை! (கங்)

மற்றவை

எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு

மங்கையர்கள் செந்தமிழில் பாடினார் — நல்ல

திங்கள் கிடந்ததுபோல் எங்கும் அரிசியடி

தீம்பாலில் இட்டதனை மூடினால் — மிகு

தித்திப்பிறிகொ தித்த அந்த முத்துக்கடல் பொங் கிற்றடி

எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு

மங்கையர்கள் செந்தமிழில் பாடினார்!

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *