“ஆரியம் திராவிடம் இல்லையென்று நுனிநாக்கில் கூறிவிட்டு எவ்வளவு விழிப் போடு உங்கள் அடையாளத்தோடு இருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும்”.
“எத்தனை யுகங்களாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள் நீங்கள்!”
ஏமாற மறுக்கிறோம் நாங்கள்!
“அசோகர் என்றொரு பேரரசன்” வாழ்ந்தான் என்பதே அறியாத பூமி இது!
“ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep)” என்ற வெள்ளைக்காரன் வரும்வரை.
ஒரு “ஜான் மார்ஷல் (John Marshall)” வந்து “சிந்துவெளி நாகரிகம்” பற்றி அறிவிக்கும் வரை.
“நீங்கள் சொன்ன பொய்களே” இந்நாட்டின் வரலாறு!
“கால்டுவெல் (Caldwell)” வந்து பிராகுயி மொழி உள்ளிட்ட “திராவிட மொழிக் குடும்பம்” பற்றி பேசும் வரை நம்மைப் பற்றிய நமது புரிதல் வேறு!
“தேவ மொழி” என்ற கதையை நாங்கள் ஒப்புக்கொள்ள மறுத்ததும் “உடுக்கையின் மறுபுறம் பிறந்தமொழி” என்று கதை சொன்னீர்கள்!
“சிந்துவெளி, சங்க இலக்கியம், கீழடி ஆதிச் சநல்லூர்” தரவுடன் நாங்கள் வருகிறோம்!
” எங்கே அமர்ந்து பேசலாம்* என்று நீங்கள் சொல்லுங்கள்!”
சங்க இலக்கியம் பேசிய “பகடையை” “சிந்துவெளியிலும் கீழடியிலும்” நாங்கள் காட் டுகிறோம்!
“மகாபாரதப் பகடையை” நீங்கள் காட் டுங்கள்!
வரலாறு என்பது வந்த வழி பற்றிய கேள் விகளுக்கான விடை!
வாயில் சுடும் வடை அல்ல!
அதே ஆட்டம்
அதே பகடை
உருள்வது ஆடுபவன் தலை அல்ல!
– ஆர். பாலகிருஷ்ணன்
அய்.ஏ.எஸ். (ஓய்வு)