பார்ப்பனர்கள் தம்மைப் ‘பிராமணர்கள்’ என்று கூறிக்கொண்டு ‘பிராமணாள் ஓட்டல்’ என்று போட்டுக்கொண்டு, நம்மைப் பஞ்சமன், சூத்திரன் என்ற வகுப்பில் குறிக்கும் அரிஜனன், நாயுடு, ரெட்டியார், முதலியார், பிள்ளை, ஆச்சாரி, செட்டியார், நாடார் முதலிய பெயர் களால் அழைத் தும், அழைத்துக்கொள்ளும்படி செய்தும் வரு கிறார்கள். அதாவது பதிவு (ரிஜிஸ்டர்) ஆகும் ஆதா ரங்களில் போட்டு ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள். இன்று நடப்பில் இருக்கும் ஜாதிக் கும், வகுப் புக்கும் இதுதான் தத்துவமாக இருந்து வருகிறது.
பார்ப்பனர்கள் பிராமணர்கள் ஆனால்( பார்ப்ப னர்கள் அல்லாத மற்ற “இந்து”க்கள் என்பவர்கள் ஆகிய) நாம் யார்? சூத்திரர்கள் என்பதாகத்தானே (நாமே ஒப்புக்கொண்டதாக) ஆகிவிடுகிறது?
ஆதலால், பார்ப்பனர்களை நாம் பிராம ணர்கள் என்று ஒப்புக் கொண்டதாகக் காட் டுவதோ அல்லது நாம் அவர்களை பிராமணர்கள் என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங் களில் எழுதுவதோ ஆகிய காரியங்கள், நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வ தாகவும் நமது கருத்துக்கும் ஆசைக்கும் முரணாக நடந்ததாகவும் ஆகிறது.
எனவே, திராவிடர் கழக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தங்களால் நடத்தப்படும் பத்திரி கைகள், எழுதப்படும் வியாசங்கள், புத்த கங்கள், கடிதங்கள் முதலியவற்றில் கண்டிப்பாகப் பார்ப்பனர் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் “பிராமணன், பிராமணர்கள்” என்கின்ற வார்த்தைகள் விழாதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள் கிறேன்.
“பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே” என்று பாரதியார் என்ற ஒரு பார்ப் பனரே பாடியிருக்கிறார். அந்தப் புத்தகம் பார்ப்பனர்களால், காங்கிரசாரால், சர்க்காரால் பாராட்டப்பட்டு பாடப் புத்தகமாகவும் இருந்து வருகிறது. பாட்டுக் கச்சேரிகளிலும் பாடப் படுகிறது.
ஆகவே, திராவிடர் கழக உறுப்பினர்கள் எனது இந்த வேண்டுகோளை அருள்கூர்ந்து சுயமரியாதைக் கண்கொண்டு பார்த்து லட்சியப் படுத்துவார்கள் என்று கருதுகிறோம்.
– ஈ.வெ.ராமசாமி
குடிஅரசு – 17.04.1948