ஃப் இந்தியா’ பத்திரிகை நீதித்துறையில் பார்ப்பன ‘ஆக்டோபசின்’ ஆதிக்கத்தைத் தரவுகளுடன் தோலுரித்துக் காட்டியுள்ளது.
“இந்திய சட்ட அமைச்சரகத்தால் அமைக்கப்பட்ட நிலைக் குழு, “பல ஆண்டுகளாக நீடித்துவரும் கொலீஜியம் முறையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன; இதனால் பதவி நியமனங் களுக்கு இடையே பெரிய அளவில் சமூகநீதி அறவே புறக்கணிக் கப்பட்ட நிலை உள்ளது” எனும் அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டுள்ளது. உச்சநீதிமன்றங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள உயர்நீதிமன்றங்களிலும் இதே நிலை என்றும் குறிப்பிட்டுள்ளது
நாட்டின் 25 உயர் நீதிமன்றங்களுக்கு நியமனம் செய்யப் பட்டவர்களில் பெரும்பாலோர் உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும், நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் 11 பேர் மட்டுமே நீதிபதிகளாக உள்ளனர். இது மிகப் பெரிய “பாகுபாடு” ஆகும்.
2018ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றங்களில் நியமிக் கப்பட்ட மொத்தம் 537 நீதிபதிகளில் சிறுபான்மையினர் 2.6% மட்டுமே உள்ளனர். இதே நிலைதான் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமுகத்திலும் நீடிக்கிறது. நீதித்துறையில் இப்பிரிவி னரின் பங்கு முறையே 2.8% மற்றும் 1.3%. ஆக மட்டுமே உள்ளன.
இந்திய அரசமைப்புச் சட்டம் நீதித்துறை நியமனங்களில் சமூக பன்முகத்தன்மை மற்றும் சமூக நீதி கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை நடைமுறைப் படுத்துவது கொலீஜியத்தின் கடமையும் கூட; ஆனால் இது நீதித்துறையின் தலையான பொறுப்பு என்று சட்ட அமைச்சகத் திடம் நிலைக்குழு கூறியுள்ளது மேலும் நீதித்துறையில் சமூகநீதி குறைபாடு உள்ளதற்கு நீதித்துறையின் மேலிடத்தில் உள்ளவர் களும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறிடத் தவற வில்லை.
நீதிபதிகளின் கொலீஜியம் இரண்டு நிலைகளில் செயல் படுகிறது. இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான நான்கு உறுப்பினர்களைக் கொண்ட கொலீஜியம், உச்ச நீதிமன்றத் திற்கான நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான திட்டங்களைத் தொடங்கும் அதே வேளையில், உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கொலீஜியம் பெயர்களைப் பரிந்துரைக்கிறது.
நீதித்துறையில் சமூக பன்முகத்தன்மை மற்றும் சமூக நீதி குறைபாடிற்குத் தீர்வு காண்பதற்கான அவசியத்தை சட்ட அமைச்சகம் அவ்வப்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதங்கள் மூலம் வலியுறுத்தியுள்ளது. நீதிபதிகளை நியமிப்பதில் கொலீஜியத்தின் முதன்மையான கடமையான தற்போதுள்ள சமத்துவமின்மையை ஒழிக்க அது தவறிவிட்டதாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அளித்த அறிக்கையில் சட்ட அமைச்சகம் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக அரசு நியமிக்கிறது, எவ்வாறாயினும், அரசமைப்புச் சட்டத்தின் 217 மற்றும் 224 வது பிரிவுகளில் இருந்து பெறப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான விதிகள், “எந்தவொரு ஜாதி அல்லது நபர்களுக்கு மட்டுமே என்று கூறப்படவில்லை” என்றும் அமைச்சகம் தெரியப்படுத்தியுள்ளது.
நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன் மொழிவுகளை அனுப்பும் போது, சமூக பன்முகத்தன்மையை உறுதிசெய்ய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறு பான்மையினர், பெண்கள் ஆகியோரை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என்று அரசு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய அனைத்துப் பரிந்துரைகளும் சட்ட அமைச்சகத்தால் சரிபார்க்கப்படுகின்றன. மேலும் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் நியமனம் மற்றும் தகுதிகள் குறித்து ஆய்விற்குப் பிறகு உயர்நீதிமன்றம் கொலீஜியம்களின் பரிந்துரைகளுடன் விரிவான அறிக்கையை உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு அவர்களின் ஆலோசனைக்காக அனுப்பப்படுகிறது.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அரசாங்கம் நீதிபதிகளை அறிவிக்கிறது.
அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உச்சநீதிமன்றம் கொலீஜியத்தை மறுபரி சீலனை செய்வதற்காக முன்பாக பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களை திருப்பி அனுப்புகிறது. ஆனால் உச்சநீதிமன்ற கொலீஜியம் அதே நபர்களின் பட்டியலை மீண்டும் அனுப்பும் போது கொலீஜியத்தின் தற்போதைய விதிகளின் படி அவர்களை நீதிபதியாக நியமிக்க அரசாங்கம் அறிவிக்கும் நிலை உள்ளது.”
(‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 09.01.2023 டில்லி பதிப்பு)
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றமோ சட்டமன்றங்களோ ஒரு சட்டத்தை இயற்றுமானால், அது செல்லாது என்று சிகப்பு மய்யால் கோடு கிழிக்கும் அதிகாரம் படைத்தது இந்த நீதிமன்றங்கள். அத்தகைய அதிகாரம் படைத்த அமைப்பில் சமூகநீதி புறக்கணிக்கப்பட்டால் பெரும்பான்மையான மக்கள் சிறுபான்மை எண்ணிக்கை உள்ள உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகளின் நுகத்தடியின் கீழ் நசுக்கப்படும் நிலை தானே!
நாடாளுமன்ற நிலைக்குழு அதிகாரம் படைத்த ஒன்று தான்; ஆனாலும், அவற்றிற்கு மரியாதை இருப்பதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் இந்தப் பிரச்சினையை எழுப்பி ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.