சென்னை, ஜன .20 குடியரசு தினவிழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். வருகிற 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குடியரசு தின விழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடி யேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அதில் 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : தலைமை செயலாளர் வெ.இறையன்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books