நியூயார்க்,. ஜன.21 விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத் திற்கு டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. டிஜிசிஏ விதிமுறைகளை மீறிய தற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த விமானத்தை இயக்கிய தலைமை விமானியின் உரிமத்தை 3 மாதங்கள் ரத்து செய்துள்ளது. விமான சட்டத்தின் 141-ஆவது விதியின் கீழ் தனது கடமையைச் செய்ய தவறியதாக அந்த பைலட்டின் உரிமத்தை மூன்று மாதம் காலம் உரிமம் ரத்து செய் யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகள் இயக் குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.கடமையை செய்யத் தவறியதாக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.கடந்த நவம்பர் 26-ஆம் தேதி நியூயார்க் கில் இருந்து டில்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பிஸினஸ் க்ளாஸ் பிரிவில் 70 வயது பெண் ஒருவர் பயணித்தார். அதே விமானத்தில் பயணித்த பா.ஜ.க. வைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா மது அருந்திய நிலையில், அந்த பெண் பயணி மீது சிறுநீர் கழித் துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், ஏர் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளித்துள் ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் டில்லி காவல்துறையினர் கடந்த 4ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். எனினும், அவர் தலைமறை வாக இருந்த நிலையில் அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக் கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் முதலில் அவர் 30 நாள் விமானப் பய ணத்தடை என்று கூறி யது, தற்போது 4 மாதம் விமானப்பயணத்தடை என்று கூறியுள்ளது. ஆனால் அவர் மீது இன்றுவரை எந்த கடு மையான தண்டனையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஏற்கெனவே சிறுநீர்கழித்த நபரை பணியில் இருந்து நீக்கி யுள்ளது, அமெரிக்க நிறு வனம் தற்போது அமெரிக்க விமான ஒழுங்கு முறை நிறுவனம் இந்திய ரூ மதிப்பில் 30 லட்சம் தண்டனையும், அந்த விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு சிவப்பு புள்ளியும் கொடுத்து சில ஆண்டுகள் அமெரிக்க பகுதியில் விமானத்தை இயக்கக்கூடாது என்று கூறியுள்ளது.