29.10.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
👉மீண்டும் ஆட்சியமைத்தால் சட்டீஸ்கரில் எல்கேஜி முதல் முதுநிலை படிப்பு வரை இலவச கல்வி: காங்கிரஸ் வாக்குறுதி.
👉தேர்தல் தோல்வி பயத்தால், மோடி என்னை தாக்குகிறார் – சரத் பவார் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 தேர்தல் பத்திர வழக்கினை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் 31 முதல் விசாரிக்கும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉மக்களவைத் தேர்தலில் நிதீஷ் புல்பூரில் போட்டியிட வேண்டும் என்று ஜேடியுவின் உபி பிரிவு விரும்பு கிறது, கூட்டணிக் கட்சிகள் முன்மொழிவை ஆதரிக் கின்றன
👉காசாவில் மனிதாபிமானப் போர் நிறுத்தம்; அய்.நா தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பு: ‘அவமானகரமானது’ என எதிர்க்கட்சிகள் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 ஹிந்துத்வா அரசியலுக்கு பாஜக கூட்டணி கட்சியான மிசோரம் தேசிய அமைப்பு கண்டனம்.
தி டெலிகிராப்:
👉ஆட்சியை கவிழ்க்க காங். சட்டமன்ற உறுப்பினர் களிடம் பேரம், பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ கருநாட காவில் தோல்வி அடையும்: முதலமைச்சர் சித்தராமையா பேட்டி
– குடந்தை கருணா