ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

2 Min Read

 இந்தியாவிற்கே ‘திராவிட மாடல்’ ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்பைவிட 

அதிக வாக்குகளை ஈரோடு மக்கள் அளிப்பார்கள்! 

ஒரத்தநாடு, ஜன.22  இந்தியாவிற்கே ‘திராவிட மாடல்’ ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்பைவிட அதிக வாக்குகளை ஈரோடு மக்கள் அளிப்பார்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (21.1.2023) தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட் டிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெறப்போகின்ற இடைத்தேர்தலினுடைய வெற்றி என்பது இன்றைக்கு மிக முக்கியமாக தேவைப்படுகின்ற வெற்றியாகும்.

ஈரோடு என்பது கொள்கை ரீதியாக இருக்கக்கூடிய ஓர் அடிப்படையான, அடையாளமான தொகுதியாகும். அந்தத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரியாருடைய பேரன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் எதிர்பாராதவிதமாக மறைவுற்ற தால், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற விருக்கிறது.

முன்பைவிட பல மடங்கு வாக்களித்து மக்கள் ஆதரவு கொடுப்பார்கள்!

அந்த இடைத்தேர்தலில், ஏற்கெனவே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு அப்பொழுது பெற்ற வாக்கு களைவிட, இப்பொழுது பல மடங்கு வாக்களித்து மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இரண்டாவது அரசியலில் ஒழுக்கம் வேண்டும் என்பதற்கு – திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து கொண்ட முறை என்பது எடுத்துக்காட்டான முறை யாகும். அதுதான் திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டு.

இந்தியாவிற்கே ‘திராவிட மாடல்’ 

ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது

ஏனென்றால், ஓர் இயக்கத்தைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் மறைந்தால், அதே இயக் கத்திற்குத்தான் அந்த வாய்ப்பைக் கொடுப்போம் என்பதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல், முதல மைச்சர் நடந்துகொண்டது மட்டுமல்ல, வேக வேகமாக வேட்பாளரே அறிவிக்காத நிலையில், தங்களுடைய அமைச்சர் தலைமையில், அந்த இயக்கத்திற்காக ஆளுங்கட்சி வாக்கு சேகரிக்கத் தொடங்கியது என்பது – ஈரோடு இடைத்தேர்தல், இந்தியாவிற்கே ‘திராவிட மாடல்’ ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்பதற்கு அடையாளம்.

மூன்றாவதாக, தமிழ்நாட்டில் இன்றைக்கு யார் எதிர்க்கட்சி என்ற பிரச்சினையில் இன்னும் அவர்கள் ஒரு முடிவிற்கு வரவில்லை. இவர் அவரைச் சொல் லுகிறார்; அவர், இவரைச் சொல்லுகிறார்; அவர்கள் யாருமே கிடையாது, நாங்கள்தான் என்று காவிகள் சொல்லுகிறார்கள்.

இதற்கெல்லாம் முடிவு கட்டக்கூடிய தேர்தல்தான் ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறப் போகும் சட்டப்பேரவை இடைத்தேர்தலாகும்.

ஈரோடு எப்பொழுதும்போல் 

வழிகாட்டும்!

ஆகவே, இத்தேர்தல் பலருக்கு மிக முக்கியமான தேர்தலாகும். சிலருக்கு வெற்றி மணி ஒலிக்கலாம்; பலருக்குத் தோல்வி மணி ஒலிக்கலாம்.

ஆகவே, தமிழ்நாட்டு அரசியலைப் பரிசுத்தப்படுத் துவதற்கு ஈரோடு எப்பொழுதும்போல் வழிகாட்டும்!

 – இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *