தேவரடியார்குப்பம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆ.முனுசாமி அவர்களின் மறைவிற்கு இரங்கல்

1 Min Read

ஆசிரியர் அறிக்கை

முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் ஆ. முனுசாமி (வயது 93) தேவரடியார் குப்பம், திருக்கோயிலூர் வட்டம், கல்லக்குறிச்சி மாவட்டம் நேற்று (22.01.2023) காலை 6 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.

பெரியார் பெருந்தொண்டர் முனுசாமி அவர்கள், தந்தை பெரியாரிடத்தும், நம்மிடத்திலும் மாறாத பற்றுக் கொண்டவர். தந்தை பெரியாரின் கொள்கைகளில் இறுதிவரை உறுதியாக இருந்தவர். தனது இல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் திராவிடர் கழக கொள்கையை கடைப்பிடித்தவர். திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகளிலும், போராட்டங்களிலும் தவறாது கலந்து கொண்ட சீரிய பெரிய பெருந் தொண்டராவார்.

அவர் பிரிவால் துயருறும் மகன் இளங்கோவன் உள்படக் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(கி.வீரமணி)

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

23.1.2023 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *