அதிர்ச்சித் தகவல்

2 Min Read

பனை தொழிலாளர் வீட்டு பிள்ளைகளில் 
13 விழுக்காட்டினர்  குழந்தைத் தொழிலாளர்களே! 
ஆய்வறிக்கை கூறுகிறது

அரசியல்

சென்னை, அக்.29 – பனை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறு வது மிகவும் சிரமமாக உள்ளதால், 13 சதவீதம் பேர் முழுநேர குழந்தை தொழிலாளராக மாறிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், புலம் பெயர்ந்த பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் மறுக்கப்படுவது குறித்து மாநில பனை தொழிலாளர்கள், கைவினைஞர்கள் சங்கம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சென்னை பத்திரிகையாளர் மன் றத்தில் இந்த ஆய்வறிக்கையை, சங் கத்தின் பொதுச் செயலாளர் மு.சுப் பையா 26.10.2023 அன்று வெளியிட, தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாரா யணன் பெற்றுக் கொண்டார்.

இந்த ஆய்வறிக்கையில் கூறியிருப் பதாவது: பனை தொழிலாளர்கள், ஆண்டில் 8 மாத காலத்துக்கு, குடியி ருப்பு பகுதிகளில் இருந்து குறைந்த பட்சம் 20 கி.மீ. தொலைவில் உள்ள பனங்காடுகளில்தான் தொழில் நடத்தி வருகின்றனர். அங்கு மின்சாரம், குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இருப்பதில்லை. ஆண் 12 மணி நேரம் வேலை செய்தால், பெண் 15 மணி நேரம் வேலை செய்யவேண்டியுள்ளது. கருப்பட்டி வியாபாரிகளிடம் கடன் பெற்றே தொழில் செய்வதால் கருப்பட்டியை வெளிச் சந்தையில் விற்க முடியாது. இதனால் ஓராண்டுக்கு ரூ.1.86 லட்சம் வருமான இழப்பு ஏற்படுகிறது. இதனால், கடன் தொகை அதிகரிக் கிறது.

பனை தொழிலாளர்களின் குழந் தைகள் கல்வி பெற வேண்டுமானால், பனங்காட்டில் இருந்து சில கி.மீ. தூரம் நடந்து, பிறகு ஷேர் ஆட்டோ வில் செல்ல வேண்டும்.

இதனால் அவர்கள் முழுமையாக பள்ளிக்கு செல்ல முடியாமல் 58 சதவீதம் பேர் பகுதிநேர குழந்தை தொழிலாளரா கவும், 13 சதவீதம் பேர் முழுநேர குழந்தை தொழிலாள ராகவும் மாறிவிட்டனர்.

எனவே, மானியத்துடன் கடன் வழங்குதல், உற்பத்தி பொருட்களுக்கு அரசு சார்பில் விலை நிர்ணயம், காப் பீடு, இலவச தளவாட பொருட்கள், பள்ளி செல்ல போக்குவரத்து வசதி, சூரிய மின்சக்தி உபகரணங்கள் போன்றவற்றை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறும்போது, ‘‘பனை தொழிலாளர் எண்ணிக்கை வெகு வாக குறைந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக வாரியம் செயல்படாத தால் பலர் கட்டட, உப்பள தொழி லாளிகளாக மாறிவிட்டனர். பனை நல வாரியத்தில் உறுப்பினராக சேரு மாறு அவர்களையும் அறிவுறுத்தி வருகிறோம்.

கருப்பட்டி உற்பத்தி என்பது கதர் வாரியத்தின்கீழ் உள்ளது. பனை தொடர் பான அனைத்தையும் பனைமர தொழிலா ளர் நலவாரியத்தில் சேர்க்க வேண்டும். வேலை இல்லாத நாட்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரி டம் கோரிக்கை வைக்கப்படும்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *