சேலம், ஜன. 24- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப் புப் போட்டியில், மூன் றாம் பரிசு பெற்ற வாழப்பாடி அரசு பள்ளி மாணவிக்கு, அமெரிக்கா வின் யேல் பல்கலைக்கழ கம் சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப் புக் கண்காட்சி மற்றும் போட்டி, டில்லியில் நடைபெற்றது.
இதில், நாடு முழுவதும் இருந்து மாணவ, மாண விகள் 576 பேர் பங்கேற்றனர். தமிழ் நாட்டில் இருந்து, 13 பேர் கலந்து கொண்டனர்.
இதில், சேலம் மாவட் டம் வாழப்பாடியைச் சேர்ந்த தொழிலாளியான மதியழகன்- சத்திய பிரியா இணையரின் இளைய மகள் இளம்பிறை (16) பங்கேற்றார்.
இவர், வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மாணவி இளம்பிறை, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மின்தூக்கி இயந்திரத்தில் விபத்துகளை தடுப்பதற் கான கருவியை உருவாக்கி, அதனை தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் கண்காட்சியில் இடம் பெறச் செய்திருந்தார்.
இளம்பிறையின் கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான இன்ஸ்பயர் மனாங் விருதும், 3ஆவது பரிசும் கிடைத்தது.
இதனிடையே, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சார்பில் பன்னாட்டு அளவில் பள்ளி மாணவ, மாணவிக ளுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
இதற்காக, டில்லியில் நடைபெற்ற போட்டி யில், யேல் பல்கலைக் கழகம் மாணவி இளம்பிறைக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.