அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்; சுமார் 50% பேர் 6 மாகாணங்களில் உயர் கல்வி கற்கின்றனர். அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர், நியூயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ், இல்லினாய்ஸ், மாசூசெட்ஸ் மற்றும் அரிசோனா ஆகிய ஆறு அமெரிக்க மாகாணங்களில் பரவியுள் ளனர், இந்த மாநிலங்களில் சமீபத்திய QS தரவரிசையில் முதல் 100 இடங் களில் உள்ள 12 உயர் கல்வி நிறுவனங் கள் உள்ளன என ஓபன் டோர்ஸ் அறிக்கைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் கூறுகின்றன.
2021ஆம் ஆண்டில், இந்திய மாணவர்களின் மிகப்பெரிய குழு நியூயார்க் கில் (22,279), அதைத் தொடர்ந்து கலிபோர்னியா (20,106), டெக்சாஸ் (19,382) மசாசூசெட்ஸ் (16,407), இல்லினாய்ஸ் (12,209) மற்றும் அரிசோனா (8,345) என பரவியுள்ளது. இது அமெரிக்காவில் உயர்கல்வி பெறும் 199,182 இந்திய மாணவர்களில் 49.56 சதவீத மாகும்.2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உயர்கல்விப் படிப்புகளில் சேரும் நாட்டின் 55 சதவீத மாணவர் களின் இருப்பைப் பதிவு செய்து, இந்த மாநிலங்கள் சீனாவில் இருந்து வரும் மாணவர்களுக்கும் பெரும் ஈர்ப்பாக உள்ளது என்று ஒரு ஒப்பீட்டு பகுப்பாய்வு காட்டுகிறது. அமெரிக்காவில் உள்ள அனைத்து பன்னாட்டு மாணவர்களில் இந்தியாவும் சீனாவும் கூட்டாக 52 சதவீதத்தைக் கொண் டுள்ளன.
ஓபன் டோர்ஸ் அறிக்கைகள் மாணவர்களை இந்த மாகாணங்களுக்கு கவரும் காரணிகளை விளக்கவில்லை என்றாலும், உலகளாவிய QS தர வரிசை சில தரவுகளை வழங்குகிறது. கடந்த 11 ஆண்டுகளாக தரவரிசையில் உயர்கல்வி நிறுவனங்களில் முதலிடம் வகிக்கும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.அய்.டி) உட்பட உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் சிலவற்றின் தாயகமாக அவை உள்ளன. நியூயார்க் பல்கலைக்கழகம் (39), கொலம்பியா பல்கலைக்கழகம் (22) மற்றும் கார்னெல் பல்கலைக்கழகம் (20) ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள் ளன. இதேபோல், கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ (55), கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் (44), கலிபோர்னியா பல்க லைக்கழகம், பெர்க்லி (27) ஆகிய மூன்றும் முதல் 100 இடங்களில் உள்ளன.
டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஆஸ்டின், QS தரவரிசையில் 72ஆவது இடத்தில் உள்ளது, டெக்சாஸ் பல்க லைக்கழகம், டல்லாஸ், மற்றும் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம் ஆகியவை வெளிநாட்டு, அறிக்கைகள் காட்டுகின்றன. இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், சீனாவில் இருந்து வருபவர்களைக் காட்டிலும், அமெரிக்காவிலேயே தங்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், மாணவர் விசாக்களுடன் வெளிநாட்டுப் பட்டதாரிகளை மூன்று ஆண்டுகள் வரை ஊதியம் அல்லது தன்னார்வப் பணியில் சேர அனுமதிக்கும் விருப்ப நடைமுறைப் பயிற்சித் திட்டத்தில் பதிவுபெறலாம். மேலும், உயர்கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கான மிகவும் பிரபலமான படிப்புகளான கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்புகள் பொறியியல் படிப்புகளை விட முந்தியுள்ளன. ஒப்பீட்டளவில் சிறிய மாநிலமான கென்டக்கியும் விரும்பப்படும் மாநிலங்களில் தனித்து நிற்கிறது. தரவு தற்போது 4,570 இந்திய மாணவர்களைக் காட்டினாலும், மாநி லத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டு வம்சாவளி மாணவர்களில் 51.4 சதவீதம் இந்தியர்கள் உள்ளனர். இதற்கு மாறாக, இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு மாணவர்களில் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் 8.3 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
மொத்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களின் பங்கின் அடிப்படையில் அரிசோனா மற்றும் நியூ ஜெர்சி இரண்டாவது இடத்தில் உள்ளன. இரு மாநிலங்களிலும், மொத்த வெளிநாட்டு மாணவர்களில் தலா 32.5 சதவீதம் இந்தியர்கள் உள்ளனர். அரிசோனாவின் 8,891 வெளிநாட்டு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கேம்ப்பெல்ஸ்வில்லே பல்கலைக்கழகம் ( QS இல் தரவரிசையில் இல்லை), கென்டக்கி-லெக்சிங்டன் பல்கலைக்கழகம் (701-750ஆவது இடம்), மற்றும் லூயிஸ்வில்லே பல்கலைக்கழகம் (801-1000 தரவரிசை) ஆகியவற்றில் சேர்ந்துள்ளனர். மேலும், தரவுகளின்படி, நியூ ஜெர்சியில் சுமார் 32 சதவீத மாணவர்கள் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் – நியூ பிரன்சுவிக்-கில் படிக்கின்றனர், இது கணினி மற்றும் தகவல் அறிவியல் படிப்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த மாநிலங்களில் சீன மாணவர்களின் விகிதம் முறையே 27.9 சதவீதம் மற்றும் 34.1 சதவீதம். ஓபன் டோர்ஸ் அறிக்கைகள் அமெ ரிக்க வெளியுறவுத் துறை மற்றும் இலாப நோக்கற்ற பன்னாட்டு கல்வி நிறுவனம் (IIE) ஆகியவற்றால் அமெரிக்காவில் பன்னாட்டு பரிமாற்ற நடவடிக்கைகளின் ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.