ஈரோடு,ஜன.26- ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறைரோடு அரசு மருத்துவ மனை அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று (25.1.2023) நடந்த இதன் திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி, அழகிரி ஆகியோருக்கும், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் அதிக பாசத்தை பொழிந்து வரும், தமிழ் மக்களின் காவலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு எதையும் எதிர்பாரா மல் பிரச்சாரத்தை தி.மு.க.வினர் ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என்ற வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் மதச்சார்பின் மையில் நம்பிக்கை கொண்ட வர்கள்.
இந்த தேர்தலில் மதச்சார்பற்ற அணியின் வேட்பாளராக போட் டியிடும் போது, தனிப்பட்ட முறையில் துக்கம் அதிகமாக இருந்தாலும் எனது மகன் விட்டுச்சென்ற பணி களை தொடர்ந்து செய்ய வேண் டும் என்ற ஆவலில் தான் ஒப்புக் கொண்டேன்.
தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்க ளுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் கலாச்சாரத்துக்கு காவலனாக போர் வீரராக காத்துக் கொண்டு இருப்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவரது கரத்தை பலப்படுத்தும் வகையில் மிகப் பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தா லும்கூட, நாம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுதான் மு.க.ஸ்டாலினுக்கும், ராகுல் காந்திக்கும் சூட்டு கின்ற மகுடமாக இருக்கும்.
எனது மகனைபோல், எனது தந்தையைபோல், எனது தாத்தா பெரியாரைபோல், வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மக்க ளுக்காக உழைப்பேன்.
இவ்வாறு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் கூறினார்.