பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு நாள் பெருவிழா

1 Min Read

தமிழ்நாடு, மற்றவை

 திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்            26-1-2023 அன்று காலை 7.30 மணியளவில் இந்திய நாட்டின் 74ஆவது குடியரசு நாள் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  

மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், பள்ளியின் மாணவத் தலைவர் தலைமையில் NCC, JRC, NGC, Scout & Guide, Cub & Bul Bu   குழுவைச் சார்ந்த மாணவ மாணவிகளின் சீரிய அணிவகுப்பு நடைபெற்றது.  அணிவகுப்பு மரியாதையை பள்ளி முதல்வர் டாக்டர் க.வனிதா ஏற்றுக் கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி, அனைவருக்கும் குடியரசு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

நிகழ்வில் மாணவ  மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *