காங்கிரஸ் நடத்தும் ‘கையோடு கை கோர்ப்போம்’ திட்டம் தொடக்கம்

Viduthalai
2 Min Read

சென்னை, ஜன. 26- நாடு முழுவதும் பாஜக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக காங்கிரஸ் ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பிரச்சாரம் இன்று (26.1.2023) தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை சத்திய மூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷியாமா முகமது நேற்று (25.1.2023) செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வரலாற்று சிறப்புமிக்க 3,500கி.மீ இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தின் 131ஆவது நாளை ராகுல்காந்தி கடந்துள்ளார். வழியெங்கும் மக்களின் அனுபவங்களை உன்னிப்பாக கேட்டுக்கொண்டே அவர் பய ணத்தை மேற்கொள்கிறார்.

நாடு முழுவதும் பாஜக ஆட்சி மீது நம்பிக்கையற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்தசொத்துகளில் முதல் 10 பெரும் பணக்காரர்களிடம் 64 சதவீதம் சொத்துகள் உள்ளன. 50 விழுக்காட்டுக்குக் குறைவானவர்களிடம் 6சதவீத சொத்துகள் மட்டுமே உள்ளன. மோடியின் நண்பர்கள் வாங்கிய ரூ.72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய் யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு விவசாயியின் கடன் கூட தள்ளுபடி செய்யப் படவில்லை.

மோடியின் செல்வாக்கை உயர்த்திப் பிடிக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் பாஜக செலவழித்துள்ளது. மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இது வரை அவர் நிறைவேற்ற வில்லை. மாறாக, இளைஞர்களிடையே வேலையின்மை, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இந்தியாவின் எல்லையில் 2 ஆயிரம் சதுரஅடி நிலப்பரப்பை சீனா கைப் பற்றியுள்ளது. இவ்வாறு 2014ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நாடு இப்போது நெருக்கடியான நிலையில் உள் ளது. எனவே, மோடி ஆட்சியில்நடந்த தவறு களை, மக்கள் விரோத செயல்களை மக்களி டையே கொண்டு செல்லும் விதமாக 6 லட்சம் கிராமங்களில், 2.5 லட்சம் பஞ்சாயத்தில், 10 லட்சம் வாக்குச்சாவடி மய்யங் களில் ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

இதன்மூலம் மக்களிடையே துண்டுப் பிர சுரங்கள் விநியோகிக்கப் பட இருக்கிறது. இந்த பிரச்சாரம் நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 26ஆம்தேதி வரை நடை பெறுகிறது. தமிழ்நாட்டுக்கான பிரச்சாரத்தை, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார். 

-இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *