வாகனப் பதிவு
சென்னை மாநகரம் முழுவதும் வாகனங்களில் ஒரே சீராக பதிவு எண்கள் இல்லாத 16,107 வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பதிவு எண்களை மாற்றியதாக 145 வாகனங்களை போக்குவரத்துக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
சாதனை
2022 – 2023ஆம் ஆண்டில் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை 1110 குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது என அதன் பொது மேலாளர் பி.ஜி.மால்யா தகவல்.
அரசாணை
சென்னை அடையாறு ஆற்றின் முகத் துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப் பணித் துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்கு முறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு.
மருந்து
குடியரசு நாளான நேற்று (26.1.2023) உலகின் முதல் நாசி வழி கரோனா தடுப்பு மருந்து இன் கோவேக் புதுடில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மின்மயமாக்கம்
தெற்கு ரயில்வேயின் 87 சதவீத ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்.
மேம்பால பணிகள்
சென்னை துறைமுகம், மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர் மேம்பால திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளி அடுத்த மாதம் இறுதி செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தகவல்.
வழிகாட்டுதல்
பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிளஸ்-2, பிளஸ்-1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் 30.1.2023 அன்று நடைபெறும்.
மருந்து வாரியம்
கருக்கலைப்பு மய்யம் இடம் பெற்றுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சட்டப் படி மருத்துவ வாரியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு உறுதிப்படுத்த வேண்டும் என டில்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.