கரூர், ஜன.27 கரூர் திருவள்ளுவர் மைதான திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக் கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அமைக்கப் பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஒளிப் படக்கண்காட்சியினை பொதுப்பணித் துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் ஏ.வ.வேலு, மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர் வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகி யோர் தொடங்கி வைத்து பார் வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா முன்னிலை வகித் தார். இக்கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பில் அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் பயனாளிகள் குறித்த
100-க்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஓருங்கிணைந்த குழந்தைகளின் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் சத்தான ஊட்டச் சத்து உணவு வகைகள், வேளாண்மைத்துறை சார்பில் பாரம்பரிய நெல் வகைகள், சிறு தானியங்கள் வகைகள் அரங்குகளில்காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
மேலும், கரகாட்டம், தப்பாட்டம், பறை உள்ளிட்ட பாரம் பரியமிக்க கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. ஜன.25 முதல் 10 நாட்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த ஒளிப் படக் கண்காட்சி மற்றும் நாள்தோறும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.