மதுரை,ஜன.27- புத்தகம் வாசிப்பதன் மூலம் நல்வழிப்படுத்தும் வகையில் சிறைவாசி களுக்காக மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நேற்று (26.1.2023) 4,540 புத்தகங்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி சிறைகள் உள்ளன. இங்கு, மொத்தமாக 1600-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண் டனை கைதிகள் உள்ள னர்.
இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்தில் சிறை வாசிகளின் மறுவாழ் விற்கு உதவும் வகையில் பாதுகாத்து பராமரிக்கப் பட்டு வருகிறது.
மேலும் அவர்களின் வசதிக் காகவும், சிறை வாழ்க்கையை பயனுள்ள விதத் தில் மேம்படுத்தும் வித மாகவும், அவர்களின் எண்ண ஓட்டத்தை சீர்படுத்தும் விதமாகவும் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய அதிக புத்தகங்கள் கொண்ட நூலகமாக அமைக்க சிறை நிர்வாகம் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆயிரம் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் கடந்த வாரம் நடந்தது. இதில், மாநில மனித உரி மைகள் ஆணைய தலை வர் நீதிபதி பாஸ்கரன் கலந்து கொண்டு, சிறை துறை டி.அய்.ஜி. பழனியிடம் புத்தகங்களை வழங்கினார். அப்போது ஒரு லட்சம் புத்தகங்களை கொண்டு சேர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம் என் றும், புத்தகங்களை வழங்குவோர் தாமாக முன் வந்து வழங்கலாம் என் றும் சிறைத்துறை சார் பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிறைக்கு புத்தகங்கள் கொடுப்பதற்காக அங் குள்ள அங்காடி மய்யத் தில் புத்தக கொடை மய்யம் நேற்று தொடங் கப்பட்டது. சிறை கண் காணிப்பாளர் வசந்த கண்ணன் தலைமையில் மத்திய சிறை டி. அய்.ஜி.பழனி அதனை திறந்து வைத்தார். அங்கு கோவை இல்லம் தேடி பொது சேவை மய்யம் சார்பில் 1,000 புத்தகங்கள், மதுரை சமூக சேவகர் பிரபாகரன் 1,000 புத்த கங்கள், முகமை அறக்கட் டளை 740 புத்தகங்கள், மதுரை பிளாசம் குழுவினர் 700 புத்த கங்கள், மதுரை வணிகர் சங்க பேரவையினர் 500 புத்தங்கள், அகஸ்தியர் ஹெர்பல் சார்பில் 500 புத்தகங்கள், சமூகவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் 100 புத்தகங்கள் என மொத்தம் 4,540 புத்தகங்கள் கொடையாக நேற்று (26.1.2023) ஒரே நாளில் வழங்கப்பட்டது.
மதுரை சிறைத்துறை டி.அய்.ஜி.பழனி கூறும் போது, புத்தகங்கள் வழங்குபவர்கள் சிறை அங்காடியில் உள்ள புத்தகக் கொடையில் மய் யத்தில் வந்து கொடுக்க லாம். கொடையாக வழங்கப்படும்
புத்தகங்களை தணிக்கை செய்து, கைதி களுக்கு வாசிக்க வழங் கப்படும். அவரவர் அறை யில் வைத்து படிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்த முடியும். புத்தகங்கள் வழங்கிய வர்களுக்கு சிறைநிர்வா கம் சார்பில் பாராட்டுகள் என்றார்.