சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
மதுரை, ஜன.27 மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் நாடு மாநில செய லாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது:
மதுரைக்குப் பின்னர் நாட் டின் பல்வேறு பகுதிகளில் அறி விக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ மனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில மருத்துவ மனைகளின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மட்டும் ஒற்றைச் செங்கலோடு நிற்கிறது. பிரதமர் மோடி இரட்டை என் ஜின் ஆட்சி தேவை என்கிறார். தமிழ்நாட்டிற்கான திட்டங் களை நிறைவேற்றுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் இரட்டை எஞ்சினில் ஒற்றை இன்ஜினான மோடிக்கு டீசல் இல்லாமல் போய்விட்டது.
ஒரு பிடி மண் கூட…
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகளைத் தொடங்கு வதற்கு இன் னும் புளு பிரிண்ட் தயா ரிக்கப்படவில்லை. டிசை னும் வடி வமைக்கப்படவில்லை. இந்த இரண்டு பணிகளும் மார்ச் மாதம் நிறைவேறும் என் கிறார்கள். இதற்குப் பின்னர் தான் கட்டுமானப் பணிக்கான உல களாவிய ஒப்பந்தம் கோர முடியும். ஒப்பந்தப்புள்ளிகள் வரப்பெற்று பணி யை ஒப்படைக் கக் குறைந்தது ஆறு மாத காலம் ஆகும். ஒன்றிய அரசின் கணக் குப்படி இந்தாண்டு ஒரு பிடி மண்ணைக் கூட எய்ம்ஸ்-க்காக மோடி அரசு அள்ளிப் போடாது.
மோடியின் அடிமைகள்
எய்ம்ஸ் மருத்துவமனைக் கான அடிக்கல் பிரதமர் மோடி யால் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடப்பட்டது. தமது ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப் பட்ட பணியை ஏன் இன்னும் தொடங்கவில்லை என அதிமுக கேட்க வில்லை. எய்ம்ஸ் பணி நடைபெறாத தற்கு அதிமுகவும் ஒரு காரணம். கேள்வி கேட்டால் அதிமுக-வின் வாயை மோடி அடைத்துவிடுவார். மோடியின் அடிமையாக, கைப்பாவையாக அதி முக உள்ளது. மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்குவது என்பது மோடி அர சுக்குப் பெரிய விஷயமல்ல. அதானி, அம்பானி, கார்ப்ப ரேட்டுகள், ஏக போக முதலாளி களுக்கு ரூ.10.75 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர்கள் ரூ. 2,000 கோடி ஒதுக்காததற்குக் காரணம் என்ன?
சேதுக் கால்வாய் திட்டத்திற்கும் முட்டுக்கட்டை
சேதுக் கால்வாய் திட்டத் திற்கு மீண்டும் பாஜக முட்டுக் கட்டை போடுகிறது. தொழில் வளர்ச்சி கூடாது, வேலை வாய்ப்புகள் கிடைக் கக்கூடாது, தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என அழைக்கக்கூடாது. தமிழ் நாட்டை வலிமையான மாநில மாக மாற் றக்கூடாது என்பது தான் பாஜகவின் திட்டம். தமிழ் நாட்டை உரசிப்பார்த்தால், சீண்டிப்பார்த்தால் மக்கள் தன்னெ ழுச்சியாகக் கொந் தளித்து எழுவார் கள்.
மோடியை அம்பலப்படுத்திய பிபிசி
குஜராத்தில் மோடி பிரதம ராக இருந்தபோது நடைபெற்ற வன்முறையில் ஏராளமான முஸ்லிம் கள் கொல் லப்பட் டனர். வன்முறைக் கும் மோடிக் கும் நேரடித் தொடர்பு உள் ளது என்று பிபிசி அம்பலப் படுத்தி யுள்ளது. இந்த உண் மையை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற் காகப் பிபிசி ஆவணப் படம் தொடர்பான யூடிப் உள்ளிட்ட இணைய தளங்களை மோடியும், அமித்ஷாவும் முடக்கியுள்ளனர். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா?
அண்ணாமலையின் நடைப் பயணம்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் பல் வேறு பிரச்சனைகளில் மோடி அம்பலப்பட்டு நிற்கிறார். இந்த நிலையில் பாஜக மாநி லத் தலைவர் அண்ணாமலை நடைப் பயணம் மேற்கொள்ளப் போவதாகக் கூறுகிறார். இவர் மதுரைக்கு வரமாட்டாரா? தோப் பூர் பக்கம் செல்ல மாட்டாரா? அவரிடம் மக்கள் எய்ம்ஸ் மருத்துவனை என்ன வானது எனக் கேள்வியெழுப் பாமல் இருப்பார்களா? இதற் குப் பதில் சொல்லாமல் அவ ரால் நழுவ முடியாது. தப்பிக்க முடியாது. அண்ணாமலை நடத்தும் பயணம் மோடி அரசுக்கான இறுதிப் பயணமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.