20.1.2023 அன்று “அரசமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்” என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை மிகவும் இன்றி யமையாத, அவசியமான, தேவையான அற்புதமான உரையாகும். ஆளுநர் யார்? அவருக்கு என்ன அதிகாரம்? அவர் ஒரு மாநிலத்திற்கு தேவையா? அவர் தவறு செய்யலாமா? என்பவற்றிற்கு கொடுத்துள்ள விளக்கம் அனை வருக்கும் தேவையானது. நாட்டின் நலனுக்குத் தேவையானது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம் குடியரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்றத் திலோ, நீதிமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ இல்லை. யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று சொன்னால் மக்களிடம்தான் இருக்கிறது அதுதான் முக்கியம் – மக்களுக்காக சட்டம், மக்களுக்காக ஆட்சி – எனவே மக்கள் நலனுக்காக அரசியலில் இருப்பவர்கள் இதை உணர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற விளக்கம் இந்த நேரத்தில் புரியாதவர்கள் புரிந்துகொள்ளத் தேவையானதாகும்.
திருக்குறள் ச. சோமசுந்தரம்
தஞ்சாவூர்