1794இல் மகாராட்டிரத்தில் மகாதோஜி இறந்தபின் நானா பட்னிள் (நானாபர்னவிஸ்) என்னும் வைதீகப் பார்ப்பனன் மராட்டியப் பேரரசின் தலைவன் ஆனான்.
அவனுக்கு 9 மனைவிமார்கள் இருந்தார்கள். அவன் இறக்கும்போது அவனுக்கு வயது ஏறத்தாழ 60க்கு மேல் இருக்கும் அப்போது இருந்த அவனது இரு மனைவியர்களில் ஒருத்தி 14 வயது உடையவளாகவும் மற்றொருத்தி 9 வயது உடையவளாகவும் இருந்திருக்கின்றனர் என்று சரித்திரம் கூறுகின்றது.
பேஷ்வாக்கள் குடும்பங்களில் குழந்தை மணம்
பேஷ்வாக்கள் குடும்பங்களில் குழந்தை மணம் எவ்வளவு மோசமாக நடைபெற்றது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டைக் காண்போம்.3 வயது உடைய பார்ப்பனப் பெண் ஒருத்தியை 45 வயதுடைய ஆடவன் ஒருவன் மணந்து கொள்ளலானான். இச்சங்கதி அக்குழந்தையின் பெற்றோர்களுக்குத் தெரியாது. தெரிந்த உடனேயே அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் வேறு ஒருவனுக்கு அக்குழந்தை மணம் செய்துக்கொடுக்கப்பட்டது என்ற குறிப்பும் காணப்படுகின்றது.
( நூல்: வரலாற்றில் பெண் கொடுமைகள், புலவர் கோ.இமயவரம்பன்)