கழக இளைஞரணித் தோழர்கள் 200 பேர் உடற் கொடைக்கான படிவத்தை வழங்கினர்
உயிர் காக்கும் பெரியார் லைஃப் செயலியை தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜன. 28- திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அரங்கத்தில் திரா விடர் கழக மாநில இளைஞரணி கலந் துரையாடல் 22.01.2023 அன்று மாலை நடைபெற்றது.
பெரியார் லைஃப்
திராவிடர் கழக மாநில இளைஞ ரணிக் கலந்துரையாடல் கூட்டம் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் எழுச்சி யுடன் நடைபெற்றது. அப்போது, தமிழர் தலைவர் கழக இளைஞரணி சார்பில் உடற்கொடை, குருதிக்கொடை வழங்குவ தற்காக உருவாக்கப்பட்ட பெரியார் லைஃப் செயலியை தொடங்கி வைத்து இளைஞரணியினருக்கான, எதிர் கால வேலைத்திட்டங்களை வழங்கி நமது தோழர்கள் பொது வாழ்விலும், தனிப் பட்ட வாழ்விலும் சிறந்த கட்டுப்பாட் டு டன் திகழ வேண்டும் எனக் கூறி புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார்.
200 பேர் உடற் கொடை
முன்னதாக, கழக இளைஞரணித் தோழர்கள் 200 பேர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் உடற் கொடை வழங்குவதற்கான படிவத்தை வழங்கினர். மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ. இளந்திரையன் வரவேற்றுப் பேசினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செய லாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினர்.
இதனையடுத்து மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் வெள்ளலூர் ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் சென்னை வழக் குரைஞர் சோ.சுரேஷ், திண்டிவனம் வழக் குரைஞர் தா. தம்பிபிரபாகரன், தஞ்சை இரா.வெற்றிகுமார், திண்டுக்கல் நா.கமல் குமார், தர்மபுரி ம.செல்லதுரை, ஜெகதாப் பட்டினம் குமார் ஆகியோர் உரையாற்றி னர்.
இளைஞரணி
பொறுப்பாளர்கள் உரை
பின்னர், திருவாரூர் மண்டல இளை ஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, அரியலூர் மண்டல இளைஞரணி செய லாளர் பொன்.செந்தில்குமார், சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் ப.வேல்முருகன், தஞ்சை மண்டல இளை ஞரணி செயலாளர் முனைவர் ராஜாவேல், சென்னை மண்டல இளைஞரணி அமைப் பாளர் மு.சண்முகப்பிரியன், ஈரோடு மண் டல இளைஞரணி செயலாளர் வெற்றி, காரைக்கால் மண்டல இளைஞரணி தலைவர் மு.பெரியார் கணபதி, மதுரை மண்டல இளைஞர் அணி செயலாளர் இரா.அழகர், புதுச்சேரி மண்டல இளை ஞர் அணி தலைவர் தி.ராசா, விழுப்புரம் மண்டல இளைஞர் அணி செயலாளர் தே.பகவான்தாஸ், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்தூர பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து வடக்கு மண்டலம் மாவட் டங்களின் சார்பில் வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண்டியன், தெற்கு மண் டல மாவட்டங்களின் சார்பில் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் முத்துக்கருப் பன், கிழக்கு மண்டல மாவட்டங்களின் சார்பில் நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு. ராஜ்மோகன், மேற்கு மண்டல மாவட்டங்களின் சார்பில் தர்மபுரி மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ்திலீபன் ஆகியோர் உரையாற்றினர்.
கலந்து கொண்டோர்
திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக் கியராஜ், மாநில தொழிலாளரணி செய லாளர் சேகர், ஆவடி மாவட்ட இளைஞ ரணித் தலைவர் கார்வேந்தன், தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலை வர் மகேந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.மணிதுரை, செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார் திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ், அரியலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அறிவன், செயலாளர் க.கார்த்திகேயன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞ ரணித் தலைவர் பாலசுப்ரமணியன், விருது நகர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுந்தரமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் கரிகாலன், திண் டுக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர் சக்தி சரவணன், அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் மகாராஜா, சிதம் பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ், குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார், தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் பிளாட்டோ,ஆத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்முகிலன், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் தமிழரசன், கரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்சாண்டர், மன்னார்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் கண்ணன், ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைவர் அஜூரியா, பழனி மாவட்ட இளைஞரணி தலைவர் கருப்புசாமி, திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி தலைவர் சங்கர், திருச்சி மாவட்ட இளைஞரணி செயலா ளர் மகாமணி, ஈரோடு மாவட்ட இளை ஞரணி செயலாளர் மோகன்ராஜ், விருத் தாசலம் மாவட்ட இளைஞரணி செயலா ளர் பெரியார் மணி, ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் சோபன் பாபு, வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்த் குமார், கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெக நாதன், இலால்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் பனிமலர்ச்செல்வன், அரிய லூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன், தஞ்சாவூர் மாவட்ட இளை ஞரணி செயலாளர் வெங்கடேசன், காரைக்கால் மண்டல இளைஞரணி செயலாளர் லூயிஸ் பிஃயர், திருவாரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன், மன்னார்குடி மாவட்ட இளைஞ ரணி செயலாளர் இளங்கோவன், அறந் தாங்கி மாவட்ட இளைஞரணி செயலாளர் காரல் மார்க்ஸ், கடலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு , கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அலெக்ஸ், திருச்சி மண்டல செயலாளர் ஆல்பர்ட், தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் உள்பட 330க் கும் மேல்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் தொடக்கமாக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறுப்பாளர் ஜியோ டாமின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
இறுதியாக திருச்சி மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.