மதுரையில் நேற்று ( 27.1.2023) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற “சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாட்டில்” கீழ்க்கண்ட நூல்கள் வெளியிடப்பட்டன.
(1) சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் – கலைஞர்
(2) சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் – ஆசிரியர் கி.வீரமணி
(3) சேது சமுத்திரத் திட்டம் – ஒரு விளக்கம் – டி.ஆர். பாலு எம்.பி.,
(4) சேது சமுத்திரத் திட்டம் ஏன்? எதற்காக? – ஆ. கோபண்ணா, (தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்)
ரூ.220 மதிப்புள்ள இந்நூல்கள் நேற்று ரூ.200க்கு வழங்கப்பட்டது.
நூல்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட, டி.ஆர். பாலு எம்.பி., கே.எஸ். அழகிரி, தொல். திருமாவளவன் எம்.பி., அமைச்சர் பி. மூர்த்தி, என். பெரியசாமி, மு. செந்திலதிபன் முதலியோர் பெற்றுக் கொண்டனர். பொது மக்கள் வரிசையாக மேடைக்கு வந்து ஆசிரியரிடம் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.