மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்திற்கு ஒன்றிய பா.ஜ.க.அரசு பதறுவது ஏன்?

2 Min Read

பெரியார் திடலில் நடந்த கலந்துரையாடல்

அரசியல், திராவிடர் கழகம்

சென்னை, ஜன. 28- உலகப் புகழ்பெற பி.பி.சி நிறு வனத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட பிரத மர் மோடி தொடர்பான ஆவணப் படத்தின் இரு பாகங்கள்  தொடர்பாக பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத் தில் நேற்று (27.01.2023) கலந்துரையாடல் சிறப் பாக நடைபெற்றது.

பலதரப்பட்ட குரல் கள், ஆழமாக, நிதான மாக, அறிவுப்பூர்வமாகப் பகிரப்பட்டன. 

தமிழ்நாட்டில் முதன் முதலாக இந்தத் தலைப் பில் நடந்த கூட்டம் என் பதால் நிகழ்ச்சி தொடங் குவதற்கு முன்பே ஏரா ளமான ஊடகத்தினர் வந்திருந்தனர். 

கலந்துரையாடலைத் தொடங்கிவைத்து, பெரியார் சுயமரியாத ஊடகத் துறை அமைப் பாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் உரையாற் றினார்.

தொடர்ந்து ஆவணப் பட இயக்குநர் மறுபக்கம் ஆர்.பி.அமுதன், ஆய்வா ளர் சுபகுணராஜன்,  ஓவி யர் மருது, பத்திரிகையா ளர்கள் சாவித்திரி கண் ணன், தி,மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, ஊடகவியலாளர் முரளி கிருஷ்ணன் சின்னதுரை, வழக்குரைஞர் துரை.அருண் ஆகியோர் உரை யாற்றினர்.

மோடி பற்றிய இந்த ஆவணப்படம் ஏன் முக்கியம், அதன் சிறப்பு என்ன, அதை நாம் ஏன் பார்க்க வேண்டும், திரையிடவேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டது. 

கருத்துரிமைக்கான குரலை ஓங்கி ஒலித்தது டன், இந்தப் படத்தைத் திரையிட சட்டப்படித் தடையில்லை என்பதை பங்கேற்பாளர்கள் தெளிவுபடுத்தினர். இந்த ஆவணப்படத்தைக் கண்டு மோடி அரசு அஞ்சுவதற்கு, இதன் தரமும், ஆதாரப்பூர்வமான வாத மும், உருவாக்கமும் முக் கிய காரணம் என்றும், இதை மக்களிடம் கொண்டு செல்ல ஒன்றிய அரசிடமிருந்து எதிர்ப்பு கள் வந்தால் அதை எதிர் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், மோடி யின் இந்த இருண்ட பக்கத்தைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்ட இப் படம் பயன் படும் என்று கருத்தாளர் கள் தெரிவித்தனர்.

பெரியார் சுயமரி யாதை ஊடகத் துறை, படப்பெட்டி திரைப்பட இயக்கம் மற்றும் மறுபக் கம் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்த இந் நிகழ் வில் வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர் கள், ஊடகத் துறையினர் பெருமளவில் பங்கேற்ற னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *