கடவுளை வணங்குகிறவனைக் காட்டுமிராண்டி என்பதால் மனம் புண்படுகிறது என்கின்றான். கடவுளை வணங்காதவனைப் பற்றி அவன் சொல்வது மட்டும் நம் மனதைப் புண்படுத்தவில்லையா? சிறீரங்கத்தைப் (திருச்சி யில் உள்ள) பற்றிச் சொல்லும்போது, “பொன்னரங்கம் போற்றாதார் புலையராமே” என்று பாடி இருக்கிறான். சிறீரங்கத்தில் இருக்கிற கடவுளைத் தொழாதவன் புலையனுக்குச் சமம் என்கின்றார். இது நம் மனதைப் புண்படுத்தாமல் இனிக்கவா செய்யும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’