தொழில்
சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் வரும் 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. அதன்படி சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முகாமில் பங்கேற்கலாம். தொடர்புக்கு: 044-22252081, 22252082, 9677152265, 8668102600 என்ற எண்ணில் அழைக்கலாம்.
கடலோர…
வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தில் இன்று முதல் 4 நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல.
நிதி செலுத்த
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரி யும் தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயி ரத்திற்கும் மிகாமல் ஊதி யம் பெறும் தொழிலாளர் களின் 2022ஆம் ஆண் டிற்கான தொழிலாளர் நல நிதி தொகையை வரும் 31ஆம் தேதிக்குள் தமிழ் நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு வங்கி வரை வோலை அல்லது காசோ லையாக அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பாராட்டு
தமிழ்நாட்டில் போதைப் பொருள்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உயர்நீதி மன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.