கடலூர் மாவட்டம், சிதம்பரம் கழக மாவட்டம், ஆண்டி பாளையம் காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் முருகன் தந்தையார் பஞ்சாட்சரம் (வயது 90) 26.1.2023 அன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். இந்த செய்தி அறிந்த சிதம்பரம் மாவட்ட செயலாளர் அன்பு சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர் கா கண்ணன், மாவட்ட இணை செயலாளர் புவனகிரி யாழ் திலீபன், மாவட்டத் துணைத் தலைவர் மழவை.கோவி.பெரியார் தாசன், பொதுக்குழு உறுப்பினர் வலசை அரங்கநாதன், மேனாள் மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், பாளை யங்கோட்டை பெரியண்ணசாமி, அறந்தாங்கி செல்வ கணபதி, பாளையங்கோட்டை தமிழ்ச்செல்வம், ஆண்டி பாளையம் குணசேகரன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.