கள ஆய்வில் முதல்வர்’ திட்டம் அறிமுகம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல், தமிழ்நாடு, திராவிடர் கழகம்


சென்னை, ஜன.29 ‘
கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டா லின், இத்திட்டத்தின்படி, முதல்கட்ட மாக பிப். 1, 2-ஆம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திரு வண்ணாமலை ஆகிய 4 மாவட்டங் களில் ஆய்வுப் பயணம் மேற்கொள் கிறார்.

‘‘அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகளை நாடிவரும் மக்கள் மன நிறைவுடன் திரும்பிச் செல்லும் வகை யில் பணியாற்ற வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை. அதை உறுதிப் படுத்த ஆய்வு மேற்கொள்வேன்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு கூட்டங் களிலும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ‘கள ஆய்வில் முதல் வர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப் படுத்திய முதலமைச்சர் இத்திட்டத்தின் படி, முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர் களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதில், முதல்கட்டமாக பிப். 1, 2-ஆம் தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு சென்று, நிர்வாகப் பணிகள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை பார்வையிடுவதுடன், செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

அப்போது, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வரு வாய் துறை மூலம் வழங்கப்படும் சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ் வாதாரத்தை உயர்த்தல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந் தைகள் நலன், ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

ஆய்வின் முதல் நாளான பிப்.1-ஆம் தேதி அப்பகுதிகளில் விவசாயசங்கப் பிரதிநிதிகள், சுயஉதவிக் குழுக்கள், தொழில் அமைப்புகளின் கருத்துகளை யும், கோரிக்கைகளையும் முதலமைச்சர் கேட்டறிகிறார். அன்று மாலை, 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக துணை தலைவர், காவல்துறைத் தலைவர் (வடக்கு) ஆகியோருடன், சட் டம் – ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்வார்.

மேலும், அமைச்சர்கள், திட்டங் களை செயல்படுத்தும் முக்கிய துறை களின் செயலர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோருடன்4 மாவட்டங்களில் கள ஆய்வும் மேற்கொள்ள உள்ளார்.

கள ஆய்வில் கிடைக்கும் தகவல் களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப். 2-ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், தலைமைச் செயலர், துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *