கோவை, ஜன.29 தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு 28.1.2023 அன்று தொடங்கியுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு 2022- 2023ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 2,036 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதில் 2,025 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் 27.1.2023 அன்று வெளியானது.
இதைத் தொடர்ந்து, இணையவழி கலந்தாய்வு சனிக்கிழமை (28.1.2023) தொடங்கியது. இது நாளை திங்கள்கிழமை (ஜனவரி 30) வரை நடைபெறுகிறது. கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரார்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட் டுள்ளது.
இணையவழி கலந்தாய்வின்போது விண்ணப்ப தாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டிய தில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின்போது விண்ணப்பதாரர் களிடமிருந்து கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் ஜனவரி 30ஆம் தேதி மாலை 5 மணி வரை தங்களின் கல்லூரி, விருப்பப் பாடங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 1ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்றும் கலந்தாய்வுக்கான வழிமுறைகள், சான்றிதழ் சரிபார்ப் புக்கு அழைக்கப்பட்ட மாணவர் விவரங்களை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 0422 6611345 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.