சென்னை, ஜன. 29- ‘தமிழ் நாடு’ என்று கூட எழுதத் தெரியாதவர்களிடம் மாட் டிக் கொண்டு தமிழ்நாடு தவிப்பதாக திமுக அய்.டி. விங்கின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமர் சிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 74ஆவது குடி யரசு தின விழா தலைநகர் டில்லியில் ஜன.26 அன்று கொண்டா டப்பட்டது. டில்லியில், ராணுவ அணிவகுப்பு நடைபெறும் கடமை பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றி வைத்தார். அப்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர், ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள், ஒன்றிய அரசுத் துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இந்த அலங்கார ஊர்தியில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த அலங்கார ஊர்திக்கு வாக்களிக்கலாம் என்று ஒன்றிய அரசின் வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதள பக்கத்தில் ஜிணீனீவீறீ ஸீணீபீu (தமிழ்நாடு) என்பதற்கு பதிலாக ஜிணீனீவீறீ ஸீணீவீபீu (தமிழ்நாயுடு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவின் அய்டி விங் ட்விட்டர் பக்கத்தில்,” ‘தமிழ்நாடு’ன்னு கூட எழுதத் தெரியாத தற்குறிகளிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறது ஜிணீனீவீறீஸீணீபீu. தமிழ்நாடு அரசின் ‘குடியரசு தின அலங்கார ஊர்தி’க்கு வாக்களிக் கவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று “கேரளா” என்பதற்கு “கேரிளா” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.