1948 ஜனவரி 30ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக காந்தியார் சென்ற போது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.
ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில், காந்தி படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிக்க டில்லி செங்கோட்டையில் தனி விசாரணை அரங்கு கொண்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.
காந்தியார் கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. காந்தியாரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நதுராம் கோட்சே மற்றும் கொலைக்கு மூளையாக செயல்பட்ட நாராயண் ஆப்தே இருவருக்கும் 1949, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கோட்சே காந்தியை கொன்றதற்கு காரணம் என்ன?
“காந்தி கொலைசெய்யப்பட்டது ஏன்” என்ற புத்தகத்தை நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே எழுதியுள்ளார். அதில் நாதுராம் கோட்சே கூறியதாக அவர் எழுதி யிருப்பது, “தேசபக்தி பாவம் என்றால், நான் பாவம் செய்ததாக ஒத்துக்கொள்கிறேன். அது பாராட்டுக்கு உரியது என்றால், அந்தப் புகழுக்கு உரியவன் நான் என்று நம்புகிறேன். மனிதர் களுக்கான நீதிமன்றம் இருந்தால், நான் செய்தது குற்றமாக கருதப்படாது என்று நம்புகிறேன். நமது நாட்டிற்கும், மதத்திற்கும் நன்மை செய்யும் செயலையே நான் செய்தேன். ஹிந்துக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய, பெருமளவிலான ஹிந்துக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான கொள்கைக்கு சொந்தக்காரரை நான் துப்பாக்கி யால் சுட்டேன்.” ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்த நாதுராம் கோட்சே, பிறகு இந்து மகாசபைக்கு சென்றுவிட்டார். இருந்த போதிலும் 2016 செப்டம்பர் எட்டாம் தேதியன்று எக்னாமிக் டைம்ஸிற்கு பேட்டியளித்த கோட் சேவின் குடும்ப உறுப்பினர்கள், “கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு ஒருபோதும் விலக வுமில்லை அல்லது அவர் அங்கிருந்து வெளி யேற்றப்படவும் இல்லை” என்று கூறினார்கள்.நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் தாமோதர் சவர்க்கர் ஆகியோரின் வழிவந்த சத்யாகி கோட்சே, எக்னாமிக் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் “சாங்கிலியில் நதுராம் இருந்தபோது, 1932ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதும், அவர் சங்கத்தின் அறிவார்ந்த செயல்பாட்டாளராக இருந்தார். அவர் அமைப்பில் இருந்து வெளியேறவோ, வெளியேற்றப்படவோ இல்லை” என்று கூறினார். காந்தியாரின் கொலையையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் ஏதோ ஒரு கண்ணி இணைக்கிறது. காந்தியாரின் இறுதிக் காலத்தில் அவரது தனிச் செயலாளராக பணிபுரிந்த ப்யாரேலால் நையர், தான் எழுதிய “மகாத்மா காந்தி: கடைசி கட்டம்” (பக்கம் எண் 70) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும், எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள். அதுமட்டுமல்ல, காந்தியார் கொல்லப்பட்ட செய்தி வெளியாகும் முன்பும் வெளியான பின்பும், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள்.” மகாராட்டிரா மாநிலம் நாசிக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பச் சேர்ந்த வர்கள் ஒன்று கூடி காந்தியார் குறித்த செய்திகள் வந்த பிறகு கொண்டாடித்தீர்க்கவேண்டும் என்று பேசிக்கொண்டதாக அந்த நூலில் கூறப்பட்டிருந்தது.