சென்னை, ஜன. 30- சென்னையில் தமிழில் காது மூக்கு தொண்டை அறிவியல் மாநாடு நேற்று(29.1.2023) நடை பெற்றது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா கால அனுபவத்தை பகிர்ந்து கொண் டார்.
மாநாட்டை துவக்கி வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமீபத்தில், மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். அனைத்து தொழில் படிப்புகளையும், தாய்மொழியில் படிக்க வழிவகை செய்யும் வகையில், அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணி துவங்கி உள்ளது. மருத்துவம் நவீனமாகி வருகிறது. அது, எளிமை, புதுமை, அதே நேரம் அதிக செலவு இல்லாததாக அமைய வேண்டும். இம் மாநாடு, இதுகுறித்து அதிகம் சிந்திக்க வேண்டும். மரபு வழி, சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால், குழந்தைக ளுக்கு காது கேளாமை அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகளுக்கு தொண்டை மிக மிக முக்கியம். தொண்டை போய்விட்டால் தொண்டு போய்விடும். நவீன மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைளும் அதை உறுதிப்படுத்த வேண்டும். அதிக மக்கள் தொகை உள்ள நம் நாட்டில், அரசு மருத்துவமனைகள் மட்டும் நவீன மருத்துவ சேவையை வழங்கினால் போதாது; தனியார் பங்களிப்பும் முக்கியம். அப் படி தனியார் மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் கட்டணம், ஏழைகளுக்கு உதவு வதாக அமைய வேண்டும். கல்வியும், மருத்துவமும் சேவைத் துறையை சேர்ந்தது. அது, சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும். உலகில் திறமை யான மருத்துவர்கள் தமிழ்நாட் டில் இருக்கின்றனர். சென்னை ‘மெடிக்கல் சிட்டி’ என்றுதான் அழைக்கப்படுகிறது. எந்த நோய் வந்தாலும், அதை குணப்படுத்தக்கூடிய அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன.
“பொதுவாக இது போன்ற மாநாடு கள் ஆங்கிலத்தில் நடைபெறும். கோட் சூட் அணிந்த நபர்கள் கலந்துகொள்ள ஸ்டார் ஓட்டலில் நடைபெறும். ஆனால், இந்த மாநாட்டை நடத்துபவர் கள் வேட்டி அணிந்து, கலைஞரால் தொடங்கப்பட்ட முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெறுகிறது. கலைஞர் இருந்திருந்தால் இப்படியொரு மாநாடு நடைபெறுவது குறித்து எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார். மோகன் காமேஸ்வரனின் தந்தையிடம் நான் சிகிச்சைப் பெற்றுள்ளேன். கலைஞர் குடும்பத்திற்கே காமேஸ்வரனும், மோகன் காமேஸ்வரனும்தான் மருத்துவர்கள். சில நாட்கள் முன், சமூக வலைதளத்தில் வைரலான காட்சிப் பதிவில் வட மாநில பெண் தன் மகனுக்கு cochlear சிகிச்சை கிடைக்கப் பெற்றது என மகிழ்ச்சியாக கூறினார். தமிழ்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக cochlear சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு தொண்டை முக்கியம். தொண்டை போய் விட்டால் எங்கள் தொண்டே போய்விடும்” என கூறினார்.
நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்கு காது பிரச்சினை ஏற்படவே நான் அரசு பொது மருத்துவ மனைக்கு அவரை பார்க்க அழைத்துச் செல்லப் பட்டேன்.
நான் வருவது தெரிந்து எனது தாய் எனக்கு சூப் கொண்டு வருவார். காவலர்களை வெளியே நிற்க வைத்து விட்டு அவரது அறையில் இருக்கும் எனது தாயை சந்தித்து சூப் வழங்க சொல்வார் மருத்துவர் காமேஸ்வரன். காதுகளுக்கான cochlear implant இலவசமாக ஏழைகளுக்கு வழங்க தூண்டியவர் மோகன் காமேஸ்வரன் தான். மருத்து வம் அதிக செலவு செய்ய வேண்டியதாகி வருகிறது. அரசு மக்களை தேடி மருத்து வம், ‘முதல மைச்சர் காப்பீட்டு திட்டம்’ என முயற்சிகள் எடுத்தாலும் ஏழை மக்கள் அதிகம் கட்டணம் செலுத்தாத வகை யில் அவர்களுக்கு சேவை வழங்க தனி யார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும்” என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.