தென்காசி, ஜன. 31- தென்காசி அருகே ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவரை, ஊர்க்காரர்கள் முன்னிலையில் காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்வர் ஜாதிமறுப்புத் திருமணம் செய்துள்ளார். இதனால் அவரை ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கரிவலம்வந்தநல்லூரில் கோவில் திருவிழா நடைபெற்றது. கோயில் திருவிழாவில் பாலமுருகன் பங்கேற்க வேண்டுமானால் ஊர்காரர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பாலமுருகன் இந்த சம்பவம் குறித்து கரிவலம்வந்த நல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஊர்க்காரர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தவரை, காலில் விழ வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.