விழிக்கொடை-சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை அளித்த மனிதநேயம்
குடியாத்தம், அக்.30- வேலூர் மாவட்ட திரா விடர் கழக பொதுக்குழு உறுப்பினர் வி. இ. சிவக்குமாரின் தாயார் சிவகாமி அம்மையார் உடல் நலக் குறைவால் 24.10.2023 அன்று இரவு 11:15 மணி அளவில் இயற்கை எய்தினார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவருடைய விழிகள் அகர்வால் கண் மருத்துவ மனைக்கு கொடையாக வழங்கப்பட் டது. மருத்துவ மனையின் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழை சிவகாமி அம்மையாரின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
25.10.2023 அன்று மாலை 4 மணிக்கு சிவகாமி அவர்களின் இரங்கல் கூட்ட மும், அவருடைய உடல் கொடைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏராளமான உறவினர்களும் திராவிடர் கழகத் தோழர்களும் அனைத்துக் கட்சியைச் சார்ந்த தோழர்களும் பங்கேற்க அவ ருடைய இரங்கல் கூட்டம் நடை பெற் றது. இரங்கல் கூட்டத்தை மகளிரே தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினர். திராவிடர் கழகத்தின் காப்பாளர் ச.கலைமணி அவர்கள் இரங்கல் கூட்டத் திற்கு தலைமை ஏற்றார்.
ச.ஈஸ்வரி (காப்பாளர்), வி.சட கோபன் (காப்பாளர்), பழ.ஜெகன் பாபு (மருத்துவர் அணி), கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.தேன் மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்), பெ.கலைவாணன் (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்), சி.தமிழ்ச்செல் வன் (திருப்பத்தூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலைவர்), நீல.சந்திரகுமார் (மாநில அமைப்புச் செயலாளர்), தோழர் ஆனந்தன், தோழர் பாண்டியன், கி.நடராஜன் (மாவட்ட துணைச்செயலாளர்), பாண் டியன், த.பாரி (தலைமை கழக பேச் சாளர், தி.மு.க,), த.புவியரசி (நகரமன்ற உறுப்பினர்), கு. விவேக் (மாவட்ட செயலாளர் வி சி.க,) முல்லை வாசன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்), இ.வெண்மதி (ஆசிரியர்)
த.மு.மு.க, மாவட்ட தலைவர் நிஜாமுதின், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எம்.ஜான்பாஷா ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
உரையாற்றிய எல்லோருமே சிவ காமி அம்மையாரின் இறப்பிற்கு பிறகு அவர்களின் பிள்ளைகள் வி.இ.சிவக் குமார்,சி.லதா, இ.வெண்மதி, கோ.தமிழ்செல்வி ஆகியோர் கலந்து எடுத்த விழிக்கொடை மற்றும் உடல் கொடை போன்ற மனிதநேய செயலை குறிப் பிட்டு அதன் மூலம் என்ன பயன் என் பதையும் குறிப்பிட்டு இது எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய மிக சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என் றும் சொல்லி இரங்கல் உரை ஆற்றினார் கள். மேலும் சிவகுமார் அவர் களின் திராவிடர் கழக களப்பணிக்கு அவர் களுடைய தாயார் எவ்வளவு உறு துணையாக இருந்தார்கள் என்றும் சிவ காமி அம்மையாரும் பல்வேறு திரா விடர் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வர் என்றும் குறிப்பிட்டு உரையாற்றினர்.
எந்த விதமான சடங்கு சம்பிரதா யங்களும் இல்லாமல் சிவகாமி அம் மையாரின் இறுதி நிகழ்வு நடைபெற்றது. அதிலும் இன்னும் சிறப்பாக வழக் கமான பழைமைகளை முறியடித்து பெண்களே அவருடைய இறுதி ஊர் வலத்தை நடத்தினர் என்பதும் குறிப் பிடத்தக்கது. அதிலும் திராவிடர் கழ கத்தை சார்ந்த மகளிர் மட்டும் அல்லா மல் பெருமளவில் அவருடைய உடலை சிவகாமி அம்மையாரின் மகள்களும் உறவுகளை சார்ந்த பெண்களும் சுமந்து சென்றனர் என்பதுதான் இங்கே சிறப் பான நிகழ்வாக அமைந்தது. இறுதியாக அவருடைய உடல் வேலூர் மாவட்டத் தில் அமைந்துள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட் டது. சிஎம்சி மருத்தக்கல்லூரியின் சார் பில் வழங்கப்பட்ட சான்றிதழை சிவ காமி அம்மையாரின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் இர.அன்பரசன், மாவட்ட செயலாளர் உ.விசுவநாதன், மாநகர தலைவர் நா.சந்திரசேகரன், மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, பொதுக் குழு உறுப்பினர் க. சிகாமணி, ஆற்காடு நகர தலைவர் கோ.விநாயகம், குடியாத் தம் நகர தலைவர் சி.சாந்தகுமார்,நகர அமைப்பாளர் வி.மோகன், ப.க. மாவட் டதலைவர் மா.அழகிரிதாசன், ப.க. மாவட்ட அமைப்பாளர் பி.தனபால், மாவட்ட துணைத்தலைவர் வே.விநா யக மூர்த்தி, ப.கழகம் தி.க.சின்னதுரை, மகளிரணி அமைப்பாளர் ச.கலை வாணி, மகளிரணி துணைத்தலைவர் பெ.இந்திரா காந்தி, மகளிர் பாசறை தலைவர் ச.இரம்யா,மகளிர் பாசறை அமைப்பாளர் தி.அனிதா, மகளிரணி பொன்மொழி, மகளிர் பாசறை எ.இராஜகுமாரி, இளைஞரணி ந.கண் ணன், இளைஞரணி மாவட்ட தலைவர் பொ.தயாளன், இளைஞரணி பழனி, மாநில ப.க.துணைத்தலைவர் அண்ணா சரவணன், கந்திலி ஒன்றிய தலைவர் பேரா.கனகராஜ், சோலையார்பேட்டை நகர அமைப்பாளர் இராஜேந்திரன், காப்பாளர் பு.எல்லப்பன்,மாவட்ட அமைப்பாளர் சொ.ஜீவன்தாஸ், மாவட்ட செயலாளர் ,செ.கோபு,நுகர் பொருள் வாணிப கழகம் வானியம்பாடி இரத்தினவேல் நகர அவைத் தலைவர் தி.மு.க.ககோ.நெடுஞ்செழியன், தி.மு.க., மாதவன், பாண்டியன், ஜம்புலிங்கம், கருணாநிதி, ஜவகர், கிரிதரண் உள் ளிட்ட தோழர்கள் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் ,உறவினர்கள், பெரு வாரியாக கலந்து கொண்டனர்.