கலை, அறிவியல் பாடங்களுக்கு நுழைவுத் தேர்வு: இரு மொழி கொள்கைக்கு ஆபத்து அமைச்சர் க.பொன்முடி பேச்சு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

கீழ்வேளூர், அக்.30 கலை அறிவியல் பாடத்திற்கும் நுழைவுத் தேர்வு வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து ஏற்படும் என்று அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித் துள்ளார். 

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல் லூரியில் 2022ஆம் ஆண்டுக் கான திருக்குவளை, அரியலூர், பட்டுக் கோட்டை பொறியியல் கல்லூரிகளின் 333 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நேற்று (29.10.2023) மாலை நடைபெற்றது. விழாவிற்கு உயர்கல்வி அமைச்சரும், அண்ணா பல்கலைக்கழக இணை வேந்தருமான முனைவர் க.பொன்முடி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி 2008ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டு களுக்கு பிறகு தற்போது தான் பட்டமளிப்பு என்பது விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் பொறியியல் படிப்பதற்கு நுழைவு தேர்வு கட்டாயமாக்கப் பட்டிருந்தது. இதனால் கிராமப்புற இளைஞர்கள் கல்லூரி யில் சேர்வதற்கு கஷ்டப்பட்டு வந்தனர். கிராமத்து இளைஞர்களின் நிலையை கருத்தில் கொண்டு 2007இல் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலை மையில் குழு அமைத்து இந்த நுழைவுத் தேர்வை கலைஞர் ரத்து செய்தார். இதன் மூலம் பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 25,000இல் இருந்து 75 ஆயிரம் ஆக உயர்ந்தது.

அதேபோல கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தினார். மாண வர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமில்லாமல், வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். பாடத் திட்டங்கள் காலத்திற்குஏற்ப பல்வேறு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப நான் முதல்வன் திட்டத்தின் மூலம் புதிய திட்டங்களை வகுத்து தமிழ்நாடு முதலமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.

அதேபோல புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவி களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி பெண் கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறார். தற்போது பி.ஏ., பி.எஸ்சி, போன்ற கலை அறிவியல் படத்திற்கும் நுழைவு தேர்வு வரும் என்று தெரிகிறது. அப்படி வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *